தன் வாழ்க்கையில் நடந்த தர்மசங்கடமான நிகழ்வு ஒன்றை அமெரிக்க பெண் ஒருத்தி டிக் டாக்கில் பகிர்ந்துகொண்டுள்ளார். தன் கணவருடன் உடலுறவு செய்யும் போது அது தவறுதலாக பேஸ்புக்கில் லைவ் சென்றதாக மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்
பேஸ்புக்க்கில் லைவ் ஆப்ஷன் மிகவும் வரவேற்பை பெற்ற ஒன்று. பல திருமணங்களை பேஸ்புக் லைவ் மூலம் உலகுக்கு சொல்லும் நடைமுறையும் இப்போது உள்ளது. ஆனால் அந்த பேஸ்புக் லைவ் பெண் ஒருவருக்கு மிகவும் தர்மசங்கடமான நிலையை உருவாக்கியுள்ளது.
Indonesia | இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவித்த அரசு!
இது குறித்து அவர் டிக் டாக்கில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அமெரிக்காவைச் சேர்ந்த அப்பெண், ''கடந்த வருடம் என்னுடைய வீடியோ ஒன்றை 46 பேர் பார்த்துள்ளனர். அதில் என் தந்தையும் ஒருவர். அது நானும் என் கணவரும் உடலுறவு செய்த வீடியோதான். நான் வழக்கம்போல் செல்போனில் பேஸ்புக் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கணவர் வந்தார். நாங்கள் உடலுறவு செய்தோம். ஆனால் நான் பேஸ்புக்கை சரியாக லாக் அவுட் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அது எப்படியோ லைவ் ஆப்ஷனுக்கு சென்றுவிட்டது. எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தது. நானும் கவனிக்கவில்லை. பிறகே நான் கவனித்தேன். எங்கள் வீடியோ லைவில் சென்றுள்ளது. அதனைப் பார்த்தே என் தோழி எனக்கு அழைப்பு விடுத்திருந்தாள். பிறகு அவசரமாக அந்த வீடியோவை கட் செய்தேன். அதனை 46 பேர் பார்த்திருந்தார்கள். அதில் என் தந்தையும் ஒருவர். எனக்கு மிகவும் தர்மசங்கடமாக ஆகிவிட்டது. அதனை நினைத்து நான் ஒருவாரம் அழுதேன். அந்த தவறு குறித்து என் தந்தை புரிந்துகொண்டார். எதுவும் நடக்காதது போலவே அவர் இருந்தார். ஆனால் அவ்வப்போது மறைமுகமாக கிண்டலடிப்பார்'' என்றார்.
அமெரிக்க பெண்ணின் இந்த தர்மசங்கட பதிவுக்கு பலர் சோக எமோஜியையும், சிலர் கிண்டல் பதிலையும் அளித்து வருகின்றனர். உங்கள் பார்வையில் இது சோகம் என்றாலும் எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். உங்கள் சம்பவம் பலருக்கும் ஒரு எச்சரிக்கை என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்