அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாகவும், அங்கு பொருளாதார மீட்சி துரிதப்படுத்தப்பட்டு வருவதாலும் இந்தியர்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் (பணவீக்கம்) சூழல் உருவாகியுள்ளது. 


சர்வதேச அளவில் பொருளாதார மூலப்பொருட்களின் விலை  அதிகரிப்பு காரணமாக நாட்டின் பணவீக்கம் அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.  



சர்வதேச அளவில் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது - CRISIL


2021 நவம்பர் மாதத்தில் பணவீக்க விகிதங்களை நுகர்வோர் விலைக் குறியீட்டின் (பொது) அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, நவம்பர் மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 4.07 ஆகவும், நகரங்களில் 5.04 ஆகவும், இரண்டும் இணைந்து 4.48 ஆகவும் இருந்தன. இந்த எண்கள் மிகவும் பாதுகாப்பானது என்றாலும், கடந்த 2 ஆண்டுகளாகவே (கொரோனா தொற்றுக்கு முந்தைய காலைங்களில் இருந்தும்) நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது.    


இந்த பணவீக்கத்தை எப்படிப் புரிந்து கொள்வது?   


பொதுவாக, ஒரு நாட்டின் பணவீக்கத்தை, முதன்மைப் பணவீக்கம் (Headline Inflation), அடிப்படை பணவீக்கம் (Core Inflation) என இரண்டு வகைகளில் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சேதமடைந்தன. அதனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனையானது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலை கிலோ ரூ.100&க்கு மேல் உயர்ந்தன.  எனவே, இதுபோன்ற மிகவும் அதிகளவு ஏற்ற இறக்கங்களைப் பண்பாக கொண்ட விலை பொருட்களை கணக்கில் எடுத்துக் கொண்டு பெறப்படும்  விகிதம் முதன்மை பணவீக்கமாகும்.  பொதுவாக, இந்தியாவில் உணவு மற்றும் குடிபானங்கள் ஏற்படும் விலை மாற்றங்கள் இந்தியாவின் ஒட்டு மொத்த பணவீக்கத்தை ஏற்படுத்தும். 


 



அடிப்படை பணவீக்கத்தின் போக்கு - ஆர்பிஐ   


 


ஆனால், தற்போது உணவு மற்றும் குடிபானங்கள் விலைகளைக் கவனத்திற்கு கொள்ளாமல் பெறப்படும் அடிப்படைப் பணவீக்கம் விகிதமும் சில நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதற்கு, முக்கிய காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காலணிகள், சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்கள், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள், கல்வி, வீட்டு வாடகை போன்ற ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி காரணமாக, இந்தியாவில் சந்தை பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதுவும், விலை எற்றத்த்ரிக்கு காரணமாக உள்ளது. ட்


 



முதன்மை பணவீக்கம் வெயிட்டேஜ்  


 


யாருக்கு அதிக பாதிப்பு:  


பணவீக்கம், ஒரு  நாட்டின் செல்வந்தர்களை விட உழைக்கும் பாமர மக்களையே அதிகம் பாதிப்புக்குள்ளக்குவதாக Crisil India என்ற ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய கட்டுரை விளக்குகிறது. 2021 நிதியாண்டில் ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலையில் அதிகப்படியான பணவீக்கம் காணப்படுகிறது. அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டு வரையில் இந்த முரண் போக்கு தொடரும் என்றும் எதிர்பார்க்க்கப்படுகிறது. பொதுவாகவே, ஒரு நாட்டின் பணவீக்கம் செல்வந்தர்களுக்கும், முதலாளிகளுக்கும் அதிக லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.               



Same Inflation Different Burden by income - CRISIL 


       


நடுத்தர வர்க்கமும் பண வீக்கமும்: பணவீக்கத்தால், ஒரு பொருளை வாங்கும் ஆற்றல் குறையும். இதன் காரணமாக, நடத்தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும். மெய்வருமானமும் (Real Income), சேமிப்பும் பாதிப்படையும்.