நமக்கு ஏதாவது ஸ்ட்ரெஸ் என்றால் உடனடியாக நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தை யாருமே இல்லாத இடத்துல போய் தங்கிடணும் என்பதுதான்.ஏதோ பேச்சுக்கு நாம் சொல்லிக்கொண்டிருந்தாலு யாருமே இல்லாத தனி வீடுகள் உலகெங்கும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றனர். 




பெரிய மலைக்கு நடுவேவும், மிகச்சிறிய தீவில் தனியாகவும் வீடுகள் இருக்கின்றன. ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் போல அந்த வீடுகள் உள்ளன. அப்படியான ஒரு வீடுதான் அமெரிக்காவில் உள்ளது. இப்போது செய்தி என்னவென்றால் அந்த வீடு விற்பனைக்கு வரவுள்ளது. நீங்கள் உண்மையாகவே தனியாக இருக்க வேண்டுமென்பதை விரும்பினால் அந்த வீட்டை வாங்கி குடியேறலாம்.


Japan: எலக்ட்ரிக் சாப்ஸ்டிக்! இதை வச்சு சாப்டாலே டேஸ்ட்தான்.! உப்பை குறைக்க இப்படி நச் கண்டுபிடிப்பு!




தனிமை தனிமையே..


உலகின் தனிமை வீடு எனப்பெயர் பெற்ற இந்த வீடு அமெரிக்காவின் ஒரு குட்டித்தீவில் உள்ளது.இது தற்போது 3 லட்சத்துக்கு 39ஆயிரம் டாலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.2.5 கோடி. அமெரிக்காவின் மெய்ன் என்ற பகுதியில் உள்ள டக் டெட்ஜஸ் தீவில் இந்த தனிமை வீடு உள்ளது. 540 சதுர அடி காட்டாஜேக இந்த வீடு இருக்கும். இந்த வீடு கிட்டத்தட்ட 1.5 ஏக்கர் இடத்தில் தனியாக உள்ளது. 




ஊரும் வேண்டாம், நகரத்தின் சத்தம் வேண்டாம், அண்டை வீட்டார்கள் வேண்டாம், ஒரு முழு தனிமை வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த வீட்டை வாங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டுக்குள் இரண்டு பெட்டுகள், சின்ன ஹால், டைனிங் என இருவர் தாராளமாக தங்குவதற்கு ஏற்ப இந்த வீடு உள்ளது. ஆனால் வீடும் மற்ற பொருட்களும் மட்டுமே அங்கு உள்ளது. நீங்கள் தங்க வேண்டுமென்றால் சமையல் பொருட்களை எல்லாம் போகும்போதே கொண்டு சென்றுவிட வேண்டும். அவசரத்துக்கு அருகில் வாங்கக் கூட கடையோ வீடோ அங்கு இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்


Watch Video: பிளாட்பாரத்தில் மயங்கி ரயிலில் விழுந்த பெண்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம்




வீட்டுக்கு வெளியே சற்று நடந்து சென்றால் குளியலறை உள்ளது. கண்டிப்பாக இந்த வீட்டை வாங்குபவருக்கு கடல் மட்டுமே அண்டை வீட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


Liver : குழந்தைகளுக்கு கல்லீரல் நோய் தொற்று.. என்ன செய்யவேண்டும்? உலக சுகாதார மையம் எச்சரிப்பது என்ன?


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண