”ஜப்பான்காரன் என்னென்னமோ கண்டுபிடிக்கிறான்.. ஆனா நம்ம..” - என்ற இந்த சினிமா வசனம் மிக பிரபலம். உண்மைதான், சமூகவலைதளத்தில் வரும் வீடியோக்களை பார்க்கும்போது தெரிகிறது, தங்கள் வாழ்க்கை முறையை எளிதாக்கி கொள்ள ஜப்பானியர்கள் பல புதிய பொருட்களை அவ்வப்போது கண்டுபிடித்து வருகின்றனர். 


அந்த வரிசையில், சாப்ஸ்டிக்கில் உணவு உட்கொள்ளும் ஜப்பானியர்களின் முறையில் புதியதொரு அப்டேட்டை சேர்த்திருக்கின்றனர். பாரம்பரியமும், தொழில்நுட்பமும் சேர்ந்து இயங்கும் வகையில், எலக்ட்ரிக் சாப்ஸ்டிக்கை அறிமுகப்படுத்தியுள்ளனர். மெய்ஜி பல்கலை பேராசிரியரும், கிரின் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்த எலக்ட்ரிக் சாப்ஸ்டிக்கிற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.


இந்த எலக்ட்ரிக் சாப்ஸ்டிக்கால் உணவை எடுத்து சாப்பிடும்போது ‘உவர்ப்பு’ சுவை கூடுதலாக இருக்குமாம். அந்த வகையில் எலக்ட்ரிக் சாப்ஸ்டிக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் சாப்ஸ்டிக் பயன்படுத்துவதால், உணவுகளில் உவர்ப்பு சுவை தரக்கூடிய சோடியம் ஐயன்களை மட்டும் தேர்ந்தெடுத்து சுவை நாடிகளுக்கு அனுப்பி வைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 


உலக சுகாதார மையம் அறிவுறுத்தலின்படி, ஆரோக்கியமாக வாழ நாளொன்றுக்கு குறிப்பிட்ட அளவிலான உப்பு சத்தை மட்டுமே மனிதர்கள் உட்கொள்ள வேண்டும். ஆனால், ஜப்பானியர்களின் உணவு முறைகளில், அதிக உப்புச்சத்து இருப்பதால், இது போன்ற முறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான உப்புச்சத்தை எடுத்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.






தோராயமாக, நாளொன்றுக்கு 10 கிராம் உப்புச்சத்தை ஜப்பானியர்கள் தங்களது உணவில் சேர்த்து கொள்ளவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, உலக சுகாதார மையம் குறிப்பிட்டிருக்கும் அளவைவிட இரண்டு மடங்கு அதிகம். இதனால், இந்த எலக்ட்ரிக் சாஸ்டிக் ஜப்பானியர்களுக்கு அதிக பயன் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வரும் பட்டியலில், ஜப்பானியர்களின் புதிய கண்டுபிடிப்புதான் இந்த எலக்ட்ரிக் சாப்ஸ்டிக்! ஒரு புறம் இந்த கண்டுபிடிப்புகளுக்காக பாராட்டுகள் குவிந்து வந்தாலும், நெட்டிசன்களின் கண்களில் சிக்கி இருக்கும் இந்த சாப்ஸ்டிக், டிரால் செய்யப்பட்டும் வருகிறது. 




பிற முக்கியச் செய்திகள்:



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண