சிறிய மார்பளவு கொண்ட பெண்கள் தங்களது இணையருக்கு தெரியாமல் வேறு ஒரு தொடர்பு வைத்துக்கொள்ளும் சதவிகிதம் அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது. 


ஆய்வு


இல்லிசிட் என்கவுண்டர்ஸ் எனப்படும் திருமணம் தாண்டிய உறவுக்கான மேட்ரிமோனி வெப்சைட்தான் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்தில் இயங்கும் இந்த வெப்சைட் திருமணமானவர்களுக்கு டேட்டிங் செய்வதற்கு இணையர்களை தேடித்தரும் வேலையை செய்கிறது. இவர்கள் தங்கள் இணையருக்கு தெரியாமல் வேறொரு தொடர்பில் ஈடுபடக்கூடியவர்களின் அளவைக் கண்டறிய மக்களிடையே கேள்விகளாக கேட்கப்பட்டு ஒரு ஆய்வை தயார் செய்தனர். அந்த ஆய்வில் எத்தனை சதவிகித பெண்கள் பெரிய மார்பகங்கள் கொண்டுள்ளனர், அதில் எத்தனை சதவிகிதத்தினர் தங்கள் இணையருக்கு உண்மையாக இல்லாமல், வேறொரு உறவும் வைத்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.



பெண்களின் மார்பக அளவு


பெண்களின் மார்பக அளவை எடுப்பதற்கு, தையல் துறையில் கப் சைஸ் என்று ஒரு அளவு உண்டு. அது எண்ணாக இல்லாமல், ஆங்கில எழுத்துக்களாக இருக்கும். AA வில் தொடங்கும் அது, B, C என G வரை கூட செல்லும். அதுதான் மார்பங்கங்களின் அளவை அளக்கும் முறை.


தொடர்புடைய செய்திகள்: வெளிநாட்டு டி20 தொடர்களில் தோனி அங்கம் வகிக்க வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும்.. அது என்ன?


பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள்


இந்த ஆய்வில், பெரிய மார்பகங்கள் என்று D முதல் G வரை உள்ளவர்களை குறிப்பிடுகின்றனர். அந்த வகை பெண்கள் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 31% மட்டுமே உள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது. அதிலும் குறிப்பாக இந்த பிரிவில் உள்ளனவர்கள் பொதுவாக ஆண்களை ஏமாற்றி வேறு உறவு வைத்துக்கொள்வது குறைவு என்று ஆய்வு கூறுகிறது.


சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்கள்


இவை அல்லாமல், AA முதல் C வரை மொத்தம் 69 சதவிகித பெண்கள் உள்ளனர். இவர்களில் பலர் கணவருக்கு உண்மையாக இல்லாமல் வேறு உறவு வைத்திருக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. அதிலும் குறிப்பாக B சைஸ் கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஏமாற்றுக் காரர்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. 1000 பேரில் 350 பேர் வரை இந்த பிரிவில் வேறு ஒரு உறவு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. 


செய்தி தொடர்பாளர்


"மார்பின் அளவை வைத்து பெண்கள் அவர்களது துணைக்கு எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று கண்டறிய 1000 பேரிடம் ஆய்வு செய்தோம். அதில் சிறிய அளவு கொண்ட பெண்கள் அதாவது, AA முதல் C வரை கொண்ட பெண்களே அதிகம் ஏமாற்றுகிறார்கள். B சைஸ் கொண்ட பெண்களில் 35 சதவிகிதத்தினர் ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தங்களது இணையரை கவர்வதற்காக கவர்ச்சிகரமான உள்ளாடைகள் வாங்குவதற்கு பெண்கள் பயன்படுத்தும் முதல் கடை மார்க்ஸ் & ஸ்பென்ஸர் என்று கண்டறிந்துள்ளோம். அதனை தொடர்ந்து, விக்கிட்டோரியா சீக்ரட், ஏஜென்ட் ப்ரோவக்கண்ட்", என்று இல்லிசிட் என்கவுன்டரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


ஆய்வுகள் இந்த முடிவை தெரிவித்தாலும் இதையெல்லாம் எப்படி தீர்மானிக்க முடியும் என பலர் எதிர் கருத்துக்களை முன் வைக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.