பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பேணுவதற்காக மீண்டும் ஒருமுறை இந்தியாவைப் பாராட்டியுள்ளார். ரஷியாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவை விமர்சித்த மேற்கத்திய நாடுகளை அவர் கடுமையாக சாடியுள்ளார்.


 






லாகூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான் கான், ஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற பிராட்டிஸ்லாவா மன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பேசிய வீடியோ கிளிப்பை போட்டு காண்பித்தார்.


ரஷியாவிடம் இருந்து குறைவான விலையில் எண்ணெய் வாங்கிய விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்த போதிலும் தனது நிலைபாட்டில் உறுதியாக நின்றதற்காக ஜெய்சங்கரை பாராட்டினார்.


இதுகுறித்து வரிவாக பேசிய இம்ரான் கான், "பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற அதே நேரத்தில் சுதந்திரம் பெற்ற இந்தியா, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, அதன் மக்களின் தேவைக்கேற்ப தங்கள் வெளியுறவுக் கொள்கையை உருவாக்க முடியும் என்றால், இவர்கள் யாருக்காக (பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசு) யாரின் உத்தரவுகளை பின்பற்றுகிறார்கள்.


ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என இந்தியாவுக்கு உத்தரவிட்டனர். இந்தியா அமெரிக்காவின் 'வியூகரீதியான கூட்டாளி' ஆனால், பாகிஸ்தான் அப்படி இல்லை. ரஷிய எண்ணெய் வாங்க வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியபோது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் என்ன சொன்னார் என்று பார்ப்போம்" என்றார்.


இதன் பிறகு, ஜெய்சங்கரின் வீடியோவை இம்ரான் கான் போட்டு காண்பித்தார். தொடர்ந்து இந்தியாவை புகழ்ந்த அவர், "இதை சொல்வதற்கு நீங்கள் யார்? என ஜெய்சங்கர் கேட்கிறார். ஐரோப்பா ரஷியாவிடமிருந்து எரிவாயு வாங்குகிறது. மக்களுக்குத் தேவையானதை நாங்கள் வாங்குவோம். இப்படிதான் சுதந்திரமான நாடு செயல்படும் என ஜெய்சங்கர் பேசினார்" என்றார்.


ரஷியாவின் எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிந்த ஷெபாஸ் ஷெரீப் அரசை சாடி பேசிய அவர், "குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவது பற்றி நாங்கள் ரஷியாவிடம் பேசியிருந்தோம். ஆனால் அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்ள இந்த அரசுக்கு தைரியம் இல்லை. எரிபொருள் விலை விண்ணை முட்டும், மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர். இந்த அடிமைத்தனத்திற்கு நான் எதிரானவன்" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண