ஐபிஎல் தொடரில் இந்தியாவில் 15 சீசன்களாக மாபெரும் வெற்றியை கண்டு வருகிறது. இதன்காரணமாக ஐபிஎல் தொடரை போல் பல்வேறு வெளிநாடுகளிலும் டி20 தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஐபிஎல் அணிகள் சில புதிய அணிகளை வாங்கியும் வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாக உள்ள புதிய டி20 லீக் தொடரில் ஐபிஎல் அணிகள் சில அணிகளை ஏலத்தில் எடுத்துள்ளன. 


 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் லீக் தொடரில் ஒரு அணியை எடுத்துள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு தோனி ஆலோசகராக செயல்பட உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தச் சூழலில் இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் ஆங்கில தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். 


 






அதன்படி, “இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாராக இருந்தாலும் முழுமையாக ஓய்வு பெறாமல் மற்ற நாடுகளின் டி20 தொடர்களில் பங்கேற்க முடியாது. அப்படி அவர்கள் செய்யும் பட்சத்தில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது. பிசிசிஐ உடன் இருக்கும் அனைத்து தொடர்புகளையும் அவர்கள் முறித்து கொண்ட பிறகே இதுபோன்ற வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். 


 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தச் சூழலில் அவர் வெளிநாடு லீக் தொடரில் அணிகளுக்கு ஆலோசகராக செயல்பட வேண்டும் என்றால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு அளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது புதிய சிக்கலாக அமைந்துள்ளது. 


 


வெளிநாட்டு டி20 தொடர்களில் முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் நுழைந்தன. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இந்த இரண்டு ஐபிஎல் அணிகளும் கால் பதித்தன. அங்கு இரண்டு அணிகளை வாங்கியிருந்தன. அப்போது முதல் உலகத்தின் பல்வேறு டி20 தொடர்களில் ஐபிஎல் அணிகள் கால்பதித்து வருகின்றன. அந்தவகையில் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் 6 ஐபிஎல் அணிகள் புதிய அணிகளை வாங்கியுள்ளன. அதேபோல் சில ஐபிஎல் அணிகள் எமிரேட்ஸ் டி20 தொடரான ஐஎல் டி20 தொடரிலும் அணிகளை வாங்கியுள்ளன. இதன்காரணமாக இந்த இரண்டு டி20 தொடர்களும் மிகவும் முக்கியத்துவம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண