கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், தென் மேற்கு ஆசியாவிற்கும் இடையில் உள்ள நாடு அர்மேனியா. யெரோவானை தலைநகராக கொண்ட இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெடி விபத்து மிகவும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் யெரொவானில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலான சுர்மாலு மாலுக்கு அருகில் உள்ள பட்டாசு கிடங்கில் நடந்துள்ள வெடி விபத்தில் ஒருவர் இறந்துள்ளார். மேலும், 20 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்து நடந்த உடனே மீட்பணியில் ஈடுபட அந்நாட்டு தீயணைப்பு படை அனுப்பி மீட்பு பணிகள் மிகவும் விரவாக நடை பெற்று வருவதாக அவசரகால மீட்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அர்மேனியா நாட்டு ஷாப்பிங் மால் அருகே வெடி விபத்து: ஒருவர் பலி; 20 பேர் கவலைக்கிடம்
த. மோகன்ராஜ் மணிவேலன் | 14 Aug 2022 05:46 PM (IST)
அர்மோனியா நாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலி, 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
அர்மேனியா நாட்டில் வெடி விபத்து