கர்ப்பமாக இருப்பதை அறியாத பெண் ஒருவர் விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈக்வடாரின் குயாகுவிலில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு  கே.எல்.எம் ராயல் டச்சு விமானத்தில் தமரா என்ற பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். நெதர்லாந்தில் தரையிறங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.



இதனால் விமானத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக அவருக்கு  விமானத்தில் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் விமானத்தில் இருந்த அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. நெதர்நாலந்தில் உள்ள மருத்துவமனையில் தமரா மற்றும் அவரது குழந்தை அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, " தமராவும் அவரது குழந்தையும் தற்போது நலமாக உள்ளதாகவும், தமராவுக்கு அளிக்க வேண்டிய அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும்" மருத்துவர்கள் தெரிவித்தனர்.






மேலும், தமராவின் பிரசவத்திற்கு உதவிய பயணி ஒருவரின் பெயரை தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார். அவரது பிரசவத்திற்கு உதவியாக இருந்த பயணிகளில் ஒருவரின் நினைவாக, தமரா தனது குழந்தைக்கு மாக்சிமிலியானோ என்று பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அனைவரின் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.






முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் கொலராடோவிலிருந்து புளோரிடா செல்லும் ஃப்ரண்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்தார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கர்ப்ணிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனை அடுத்து விமானத்தை பென்சகோலா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. பின்பு, விமானப் பணிப்பெண் டயானா என்பவர் குழந்தையை பெற்றெடுக்க கர்ப்பிணிக்கு உதவினார். விமானம் தரையிறங்கும் முன்பே பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.  புதிதாக பிறந்த பெண் குழந்தையின் தாய் பிறந்த இடத்தை குறிக்கும் வகையில் தனது குழந்தைக்கு ஸ்கை எனப் பெயரிட்டார்.  இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.




மேலும் படிக்க


கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித்துகளுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்படுமா? அந்தர் பல்டி அடித்த மத்திய அரசு..!


Acid Attack : பதறவைத்த சம்பவம்.. 12-ஆம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீசிய நபர்..என்ன நடந்தது?