டெல்லி மாநிலம் துவாரகா மோட் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு பள்ளி மாணவி மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 -ஆம் வகுப்பு மாணவியானது பள்ளிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த  நபர் ஒருவர் மாணவி முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார்.






மாணவி முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு  அந்த நபர் தப்பியோடினார். இதனால் பலத்த காயமடைந்த 12-ஆம் வகுப்பு மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்பு இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. அதில், 12 மாணவியானது சாலையோரத்தில் நடந்து செல்லும்போது, அந்த மாணவிக்கு எதிரில் ஒரு இருசக்கர வாகனம் வந்தது.






அதில் பயணம் இருவரில், பின்பக்கம் அமர்ந்திருந்து நபர் ஒருவர் மாணவி முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார். பின்பு அந்த இடத்தைவிட்டு தப்பியோடினார். பின்பு அந்த மாணவியானது துடிதுடித்து ஓடியது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை துவாரகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  பின்பு இந்த சம்பவம் மாணவியின் தந்தை கூறியதாவது, " இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் என் மகள் மீது இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டது என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியவில்லை” என்றார். பின்பு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தலைமறைவாக உள்ள நபர்கள் தேடி வருகின்றனர்.