முன்னணி தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாணை விமர்சித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரோஜா கிண்டல் செய்து நடிகை ரோஜா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.


சூடுபிடிக்கும் ஆந்திராவின் தேர்தல் களம் 


வரும் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேசமயம் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் அங்கு இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆந்திராவில் பிரதான கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மக்களின் வாக்குகளைப் பெற பல நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது. அதேசமயம் தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாணும் மக்களை நேரடியாக சந்திக்கும்  ‘வராஹி யாத்திரை’ நடத்தி வருகிறார். 


பவன் கல்யாணின் ‘வராஹி யாத்திரை’ 


கடந்த 2014 ஆம் ஆண்டு ‘ஜன சேனா’ கட்சி தொடங்கப்பட்ட நிலையில்,  ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக அடங்கிய கூட்டணியில் அக்கட்சி உள்ளது. இதனிடையே வராஹி யாத்திரையில் பவன் கல்யாண் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து கருத்துகளை தெரிவித்தார். இதனால் கடுப்பான அக்கட்சியின் முன்னணி பெண் தலைவரும், அமைச்சருமான ரோஜா, பவன் கல்யாண் ஒழுக்கத்தை நடிகை சன்னி லியோனுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார். 


பதிலடி கொடுத்த ரோஜா 


ரோஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சன்னி லியோனும் இதுதொடர்பாக பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதில், ‘நான் ஒரு ஆபாச நட்சத்திரமா இருந்திருந்தாலும், என் கடந்த காலத்தை நினைத்து வருத்தப்பட்டதில்லை. உங்களை போல இல்லாமல் நான் எதையும் வெளிப்படையாக செய்வேன்’ என்ற கருத்துகள் இடம் பெற்றிருந்தது. இது சன்னி லியோனின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இடம்பெறவில்லை. 


மேலும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரோஜா,  வெறும் விமர்சனங்களில் ஈடுபடுபவர்களுக்கு மத்தியில் எந்தக் கட்சிகள் தங்கள் நலனுக்காக உண்மையாக உழைக்கின்றன என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஜன சேனாவுக்கு எதிர்வரும் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், நடிகை ரோஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவன் கல்யாணை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாத்திரையில் பறவை காவடி எடுத்து தொங்கிக் கொண்டு வந்த தொண்டர் ஒருவர், பவன் கல்யாணுக்கு மாலை அணிவித்தார். அதனை ஜெயம் படத்தில் வரும் கவிதையே தெரியுமா பாடலின் தெலுங்கு வெர்ஷனை ஒலிக்கவிட்ட மீம்ஸ் வீடியோ இடம்  பெற்றுள்ளது.