செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 13-ஆம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் 4 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். புழல் சிறையில் முதல் வகுப்பில் செந்தில் பாலாஜியை அடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், புழலில் உள்ள சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் நெஞ்சுவலி காரணமாக, நீதிமன்றத்தின் அனுமதியோடு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதேநேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. அப்படியே, மருத்துவர்கள் அனுமதியுடன் விசாரணை நடத்தலாம் என அமலாக்கத் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.




கடந்த 28 ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது. அப்போது, மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளி வாயிலாக ஆஜரானார். அவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்த நீதிபதி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவலை ஜூலை 12 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி, அவருக்கு ஜூலை 12ஆம் தேதியுடன்  நீதிமன்ற காவல் நிறைவடைய இருந்தது.


அப்போது, நீதிமன்றம் காவலை நீட்டிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்காக அவர்  காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





மேலும் படிக்க


Ajit Pawar: 24 மணி நேரத்தில் இரண்டாவது முறை..சரத் பவாரை சந்திக்கும் அஜித் பவார்..நடக்கப்போவது என்ன?


Watch Video: 'கவிதையே தெரியுமா?’ ஜெயம் படமாக மாறிய பவன் கல்யாண் யாத்திரை.. பங்கமாய் கலாய்த்த ரோஜா...