வீட்டை விட்டு ஓடிப்போன சிங்கக் குட்டியை அசால்டாக அள்ளி அணைத்து பெண் ஒருவர் தூக்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
வீட்டில் செல்லப்பிராணியாக நாயோ, பூனையோ வளர்ப்பார்கள். சிலர் மாடுகளைக் கூட வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பதும் உண்டு. ஆனால் இதெல்லாம் இந்தியாவில் தான். வெளிநாடுகளில் ஆமை, பாம்பு, பன்றி என பல விலங்குகளும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவது உண்டு. குறிப்பாக துபாய், குவைத் போன்ற நாடுகளில் சிங்கம், புலி கூட செல்லப்பிராணி தான். அப்படி ஒரு பெரிய செல்லப்பிராணியின் வீடியோ தான் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. வீட்டை விட்டு தப்பித்து ஓடிய சுட்டி சிங்கக் குட்டி ஒன்றை அந்த வீட்டின் பெண்மணி ஓடிச்சென்று நெஞ்சோடு அணைத்து தூக்கி வரும் காட்சியே வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
குவைத் நகரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் நடுரோட்டில் தப்பித்தோம் பிழைத்தோம் என சிங்கக் குட்டி ஒன்று தப்பித்து ஓடுகிறது. அதனை பின்னால் துரத்திச் செல்லும் பெண் ஒருவர் அதனை அன்பாக அதட்டித் தூக்கிக்கொண்டு மீண்டும் வீட்டை நோக்கி நடைபோடுகிறார். அந்த சிங்கக் குட்டி மீண்டும் தப்பித்து ஓடுகிறது. பலரும் அந்த வீடியோவை ரசித்ததோடு மட்டுமல்லாமல் சோஷியல்மீடியாவில் ஷேர் செய்தும் வருகின்றனர்.
பூனைக்குட்டியைப் போல அசால்டாக தூக்கி வருகிறாரே இந்தப்பெண் என ஒருவர் ஆச்சரியமாக பதிவிட்டுள்ளார்.
தன் குட்டியுடன் தாய் யானை ஒன்று சதுப்பு நிலத்தில் மேயும் வீடியோ ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவின் சதுப்பு நிலத்தில் தன் குட்டிக்கு இரை கொடுக்கும் தாய் யானையின் வீடியோ வைரலாக மாறியுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்