பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷராவுக்கு , அவருடைய சகோதரர் ரூபாய் 1 கோடி மதிப்பிலானக் காரினை பரிசளித்துள்ளார். தனக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு மீது அமர்ந்தபடி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5ல், இதுவரை இல்லாத அளவிற்கு அறிமுகம் இல்லாத நபர்கள் பலர் இந்த முறை பங்கேற்றிருந்தனர். அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சியில், நாடக கலைஞர் தாமரைச்செல்வி, மாடல் அழகி அக்சரா, மலேசியா பெண்மணி போன்றவர்கள் உள்பட விஜய் டிவி ஆங்கர்ஸ், நடிகர்கள் என 18 போட்டியாளர்கள் களம் இறங்கினார்கள். வழக்கம் போல சண்டை சச்சரவுடன் பிக்பாஸ் சீசன் 5 களைக்கட்டியது.
இந்த போட்டில் பலர் பங்கேற்றிருந்தாலும் பார்வையாளர்களுடைய பெரும் பேச்சுப்பொருளாக மாறியது வருண் மற்றும் அக்ஷராவின் நட்புதான். இருவரும் முத்த சர்ச்சையில் சிக்கி இருந்தாலும், விளையாட்டில் கவனத்துடன் விளையாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் ஒவ்வொரு போட்டியையும் நேர்த்தியாக விளையாடுவது குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் தான் கடந்த வாரம் வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவரும் ஒரே நாளில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதோடு சீசன் 5-ல், எப்போதும் பிரச்சனை செய்யும் போட்டியாளர்கள் எல்லாம் விளையாடிவரும் நிலையில், அக்ஷரா மற்றும் வருண் இருவர் மட்டும் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கேள்விகளையெல்லாம் நெட்டிசன்கள் முன் வைத்துவருகின்றனர்.
இருந்தப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே இருவரும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே இருவருக்கும் படவாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. மேலும் சீசன் 5-இல் 80 நாள்கள் விளையாடி வெளியேறி அக்ஷாராவுக்கு அவரது சகோதரர், ரூபாய் 1 கோடி மதிப்பிலான பென்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ளார். இந்த காரின் மீது அக்சரா அமர்ந்தபடி இருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்தப்பரிசு தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாகவும் அக்ஷரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மாடல் அழகியான அக்ஷரா மிஸ் சூப்பர் குளோப் இந்தியா, மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட் பட்டம் வென்றுள்ளார். இப்படி மாடலிங் துறையில் பல்வேறு வெற்றிகளைப் பெற்ற அக்ஷரா, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான காசு மேல காசு என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து பில்கேட்ஸ் என்ற கன்னட சினிமாவில் நடித்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் அக்ஷரா. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான வில்லா டூ வில்லேஜ் என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு, குயின் ஆஃப் வில்லா டூ வில்லேஜ் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.