இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமை இதயத்தை நொறுக்குவதையும் கடந்ததாக உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். நாட்டில் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகள் குறித்துப் பேசியுள்ள அவர், “உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கு எங்களால் முடிந்தவரையில் உதவிவருகிறோம். ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரம், பரிசோதனைக் கூடங்களுக்கான உபகரணங்கள், நடமாடும் மருத்துவமனைகள் (Mobile field hospitals) ஆகியவற்றை வழங்கியுள்ளோம். மேலும் நிறுவனத்தின் இதர திட்டங்களில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் 2600 பேர் இந்தப் பேரிடர் கால நிவாரணப் பணிகளுக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read:இதுவரை யாரும் போடாத புது மாஸ்க் - இணையத்தில் வைரலாகும் தாத்தா