கொரோனா உலக வரைபடத்தில் ஓரிடத்தையும் விட்டுவைக்கவில்லை. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று உலகுக்கே பிக் பாஸாக டாஸ்க் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், தன்னைத் தானே சாமியார் என அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவோ இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக இருப்பதால் இந்தியர்களுக்கு தனது ஆட்சியின் கீழ் உள்ள கைலாசா நாட்டில் இடமில்லை என அறிவித்திருக்கிறார்.

கர்நாடகாவில் பிடதி ஆசிரமத்திலேயே முகாமிட்டிருந்த நித்யானந்தா திடீரென மாயமானார். பாலியல் வழக்கில் சிக்கிய அவர் 2019ல் மாயமானார். அவர் எங்கே என உள்ளூர் போலீஸார் தேடிக்கொண்டிருக்க திடீரென கைலாசா என்றொரு நாட்டை உருவாக்கிவிட்டதாக அறிவித்தார். அப்போதுதான் நித்யானந்தா வெளிநாட்டுக்கு போனதே அம்பலமானது. ஆனால், அதற்குள் அவர் ஓர் அரசாங்கத்தையே உருவாக்கிவிட்டார். அவர் தன்னை கைலாசாவின் தலைமை மடாதிபதியாக அறிவித்துக் கொண்டார். மேலும் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலாசா டாலர் என எல்லாவற்றையும் உருவாக்கிவிட்டார்.

KAILASA's #PresidentialMandate
Executive order directly from the #SPH for all the embassies of #KAILASA across the globe. #COVID19 #COVIDSecondWaveInIndia #CoronaSecondWave #Nithyananda #Kailaasa #ExecutiveOrder pic.twitter.com/I2D0ZvffnO
— KAILASA'S SPH JGM HDH Nithyananda Paramashivam (@SriNithyananda) April 20, 2021

அந்தக் கைலாசா நாடு எங்கிருக்கிறது என இன்னும் பலருக்கும் தெளிவே ஏற்படவில்லை. ஈகுவேடார் நாட்டின் கடற்கரைக்கு அப்பால் அந்த குட்டித் தீவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இல்லாத ஊருக்கு வழி கேட்ட மாதிரி நெட்டிசன்கள் எப்போதுமே கைலாசாவின் மீது ஒரு கண் வைத்திருக்கின்றனர். எப்படியாவது ஒருமுறை அங்கு சென்றுவிட வேண்டும் என பகிரங்கமாகவே தெரிவிக்கின்றனர்.

இப்படியாக நித்தியானந்தா மீதான அபிமானம் இன்னும் துளியும் குறையாததன் காரணத்தாலேயே  இன்று வரை அவ்வப்போது ரசிககோடிகளை காணொலியில் தோன்றி தனது ஆன்மிகப் பேச்சுக்களால், அறிவியல் விளக்கங்களால் குதூகலித்துக் கொண்டிருக்கிறார் நித்யானந்தா.

இந்நிலையில் அவரே உருவாக்கியதாக பிரகடனப்படுத்திக் கொண்ட கைலாசா நாட்டின் சார்பில் அவர் இன்றொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், இந்தியா, பிரேசில், மலேசியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்துவரும் பக்தர்களுக்கு கைலாசாவில் இடமில்லை. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை உத்தரவு நீடிக்கும். ஒருவேளை வந்துவிட்டால், கைலாசர்கள், கைலாசர்கள் அல்லாதோர் என அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளூர் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என அறிவித்திருக்கிறார்.

இது ஒன்று போதாதா இணையம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தலைவா தடை விதிக்கலாமா... என கிண்டலாகவும், குலுங்கி குலுங்கி சிரித்தும் பின்னூட்டங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.