தெலுங்கானாவில் புதிய வகை முக கவசம் அணிந்து வந்த முதியவர் ஒருவர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கொரோனா தொற்று பரவலுக்கு காரணம் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.






முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்கள், சோதனையின்போது அபராதத்திற்கு பயந்து கையில் கிடைத்ததை எல்லாம் முக கவசமாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், தெலுங்கானவில் முதியவர் ஒருவர் அரசு அலுவலகத்துக்கு பறவை கூட்டை முக கவசம் போல அணிந்து சென்றுள்ளார்.


தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த மேகலா குர்மய்யா என்ற அந்த முதியவர், தன்னுடைய ஓய்வூதிய தொகையை பெறுவதற்கு வாங்க மண்டல ஓய்வூதிய அலுவலகத்திற்குச் செல்ல இருந்த நிலையில், முக கவசம் இல்லை என்றால் அலுவலகத்திற்குள் அனுமதிக்கமாட்டார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், பறவை கூட்டை முக கவசம் போல அணிந்து சென்று அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கினார். அவரின் புகைப்படம் தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.