எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதிர்கள் உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது என்று தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஜப்பானுக்கும் தமிழ் நாட்டிற்குமான தொடர்பு மிக அதிகம்.  தமிழை காப்பது என்பது தமிழனத்தை காப்பதாகும். ஜப்பான் தமிழர்களின் அன்பான வரவேற்பை நான் மறக்க மாட்டேன்.  எங்கிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு வாருங்கள் உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது" என தமிழகர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.


முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துக்கும்-சென்னை அருகே திருப்போரூரில் செயல்படும் ஜப்பானைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ்நிறுவனத்துக்கும் இடையே, 83 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததுடன், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.


அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழாய்வு இயந்திரம் போன்றவற்றை உலகளாவிய தரநிலையுடன் தயாரித்து சர்வதேச சந்தை தேவைகளை கோமாட்சு நிறுவனம் பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் சென்றுள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.சிங்கப்பூரில் Sembcorp,Temasek, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல்  , அந்த நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனையும் நேற்று சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ளார்.


மேலும் படிக்க 


IPL 2023 Finals : தொடங்கிய இடத்திலேயே முடியும் 16வது ஐபிஎல் சீசன்..இம்முறை கோப்பையை வெல்லப்போவது யார்?


விமானத்தில் தளபதி விஜயின் 'வாரிசு' படம் பார்த்து 'வைப்' செய்த சூரியகுமார் யாதவ்… வீடியோ வைரல்!