இங்கிலாந்து மகாராணி எலிசபெத் கடந்த 8-ந் தேதி காலமானார். அவரது மறைவை முன்னிட்டு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ராணி எலிசபெத்தின் மறைவால் இங்கிலாந்து மக்கள் வேதனை அடைந்தனர். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள அரண்மனையில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ராணியின் உடல் தற்போது வெஸ்ட்மினிஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடலுக்கு 24 மணி நேரமும் அரண்மனை பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு 20 நிமிடமும் என்ற அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவர் நிலை தடுமாறி கீழேவிழுந்ததில் அவரது முகம் நேராக தரையில் மோதியதில் அவர் காயமடைந்தார். ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
இதனால், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது பல்வேறு தொலைக்காட்சிகளிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த சூழலில், ராணியின் உடல் வைத்திருக்கும் சவப்பெட்டிக்கு காவல் நின்ற பாதுகாவலர் மயங்கி விழுந்தது நேரலையிலும் ஒளிபரப்பாகியதால் பொதுமக்களும், தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், மயங்கி விழுந்தவரை அங்கே இருந்த போலீசார் உடனே விரைந்து வந்து மீட்டனர். ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த 30 மணி நேரத்திற்கும் மேலாக பலரும் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : எலிசபெத் ராணியின் உடலுடன் அடக்கம் செய்யப்படும் நகைகள் என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க : Watch video :ஆட்டிசம் ஒரு தடை அல்ல! - 8 வயது சிறுவனை நினைத்து பெருமைப்படும் தாய் ! - நெகிழ்ச்சி வீடியோ!