ஆட்டிசம் குறைபாடு கொண்ட தனது மகன் காஃபி ஷாப் ஒன்றில் தானாகவே ஆடர் செய்து , அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு வருவதை கண்ட தாய் , அதனை வீடியோ எடுத்து நெகிழ்ச்சியுடன் பதிவேற்றியுள்ளார்.



பொதுவாக ஆட்டிசம் குறைபாடு , அதாவது மன இறுக்க நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு சமுதாயத்தை எதிர்க்கொள்வது மிகுந்த சவாலான விஷயமாக இருக்கும் . மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு பிரச்சனையான ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் தெளிவாக பேசவோ , நடக்கவோ அல்லது அறிவாற்றலுடையவர்களாக இருக்க முடியாது என கூறப்படுகிறது. இந்த நிலையில் 8 வயது சிறுவனான ரிலேவும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் சிறுவன தனது வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாக செயல்பட முடியாது என கூறியிருக்கிறார். ஆனால் அந்த தாய் இன்றைக்கு அதனை முறியடித்திருக்கிறார்,







ரிலேவை அதிகப்படியான ஆக்டிவிட்டீஸிற்கு உட்படுத்தும் அவரது தாய் , காஃபி ஷாப் ஒன்றிற்கு ரிலேவை அழைத்துச்செல்கிறார். அப்போது அங்குள்ள மேஜை ஒன்றில் அமர்ந்தவர் . தனது மகன் ரிலேவை ஆடர் செய்து வரும்படி அனுப்புகிறார். அதனை தனது மொபைலில் வீடியோவாக ரெக்கார்ட் செய்ய துவங்குகிறார். துள்ளிக்குதித்துக்கொண்டு ஆடர் செய்ய செல்லும் ரிலே , அங்கு தனது ஆடரை கூறிவிட்டு , அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார். பின்னர் தன் தாயை பெருமையுடன் ஒருமுறை திரும்பி பார்க்க , அந்த காட்சிகளை மொபைலில் கேப்சர் செய்த வண்ணம் பூரித்து போகிறார் தாய்.





பின்னர் தனது கார்டை எடுத்து கட்டணத்தை செலுத்தும் ரிலே , அங்கிருந்து அம்மாவிடம் ஓடி வருவதை பார்க்கும் பொழுது அவருக்கு எவ்வித நோயும் இல்லை, அவன் சாதாரண சிறுவன்தான் என்பது போல இருக்கின்றது. இதனை பகிர்ந்த தாய் “ அன்றைக்கு யாரோ என் மகனால் இதனை செய்ய முடியாது என்றார்களே ! அவர்களை இப்போது நினைத்து பார்க்கிறேன் “ என கேப்சன் கொடுத்துள்ளார். 



இந்த வீடியோ 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது . பலரும் தாய் மற்றும் ரிலேவின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.