பூமியின் மொத்த பரப்பளவில் மூன்று பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. பூமியின் நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களை காட்டிலும் கடலில் பன்மடங்கு அதிகளவில் உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில்,, ஆர்க்டிக் மட்டும் அண்டார்டிக் கண்டங்களில் அதிகளவில் வாழ்ந்து வரும் உயிரினங்களில் கடல்சிங்கமும் உண்டு. இவை உலகின் பிற பகுதிகளிலும பரவலாக கடலில் காணப்படுகிறது.


போதை பொருள் வேண்டுமா.. என்னுடன் உடலுறவு வைக்க வேண்டும்- 81 வயது முதியவர் கைது !




இந்த நிலையில், ஆழ்கடல் வாழ்க்கை என்ற டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது, அந்த வீடியோவில் கடற்கரை ஒன்றில் கடல்சிங்கங்கள் கூட்டமாக விளையாடி வருகிறது. அப்போது, அந்த கடல்சிங்கங்களின் கூட்டத்தை துரத்திச் செல்லும் நபர் ஒருவர், ஒரு கடல்சிங்கத்தை மட்டும் வாலைப் பிடித்து வெளியே இழுத்து வருகிறார்,






அந்த கடல்சிங்கமும் அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. பின்னர் அது திரும்பி அவரை கடிக்கவும் முயற்சிக்கிறது. உடனடியாக அந்த நபர்  அந்த கடல்சிங்கத்தை கழுத்தைப் பிடித்து தரையில் அதை படுக்கவைத்து அதன் மேல் ஏறி அமர்கிறார். பின்னர், அந்த கடல்சிங்கத்தின் காலில் சிக்கியிருந்த துணி ஒன்றை, தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் வெட்டி அகற்றினார். மேலும், அந்த கடல்சிங்கத்தின் கழுத்து பகுதியில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தையும் தனது கேமரா மூலம் காட்டினார். பின்னர், அவர் அந்த கடல்சிங்கத்தை விடுவித்ததும் கடல்சிங்கம் தனது கூட்டத்தை நோக்கி கடலுக்குள் பாய்ந்தது.  


இந்த வீடியோ பதிவிற்கு கீழ் பலரும் கடல் மாசுபாடு குறித்தும், கடல்வாழ் உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்தும் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். சிலர் அந்த கடல் சிங்கத்திற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இளைஞரின் துணிச்சலான இந்த செயலலை சிலர் பாராட்டி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண