உலகப்புகழ் பெற்ற அமோசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவ்வப்போது செய்திகளில் வலம் வருவார். அந்தவகையில் தற்போது தன்னுடைய ட்வீட் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறார். இந்த முறை அவர் செய்த ட்வீட் வைரலாக காரணம் அவர் அதில் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோவிற்கு விடுத்த எச்சரிக்கை தான். அவர் எதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுத்தார்?


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ வந்துள்ளார். அந்த விழாவிற்கு ஜெஃப் பெசோஸ் தன்னுடைய காதலியான லாரன் சென்சஸ் உடன் வந்திருந்தார். அந்த விழாவில் லாரன் சென்சஸ் ஜெஃப் பெசாஸ் உடன் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் ஒரு சிறிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


 






இந்தச் சூழலில் அந்த வீடியோவை மேற்கொள் காட்டி ஜெஃப் பெசோஸ் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில்,”லியோ நீங்கள் இங்கு வாருங்கள் உங்களிடம் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்” எனக் கூறி ஒரு பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவில் ஒரு படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஒரு எச்சரிக்கை பதாகையுடன் இருக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவை பலரும் லைக் செய்துள்ளனர். மேலும் பலரும் இந்தப் பதிவை காட்டி அவர் லியோனார்டோ டிகாப்ரியோவை கலாய்த்து இருக்கிறார் என்று வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர். 


 







அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரன் சென்சஸை காதலிதது வருகிறார். அவர் தன்னுடைய மனைவி மெகேன்சி ஸ்காட்டை விவாகரத்து செய்யும் செய்தி வெளியான பின்பு இந்த காதல் தொடர்பான செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. 


 






 






 






 


மேலும் படிக்க: போட்டது கொரானா தடுப்பூசி... அடித்தது ரூ.7.4 கோடி லாட்டரி... வயிற்றெரிச்சல் இருந்தால் படிக்க வேண்டாம்!