அமெரிக்காவின் பிலடில்பியா பகுதிக்கு அருகே அமைந்துள்ள மீடியா என்ற நகரத்தில் பென்சில்வேனியாவை சேர்ந்த மார்டின் பிரையன்(81) வசித்து வந்துள்ளார். அங்கு அவர் ஒரு முர்ரே ஓவர் ஹில் என்ற மருந்தகத்தை நடத்தி வந்துள்ளார். அவருடைய கடையில் இருந்து அப்பகுதி மக்களுக்கு அவர் தடை செய்யப்பட்ட போதை பொருளை தந்து வந்துள்ளார். இதற்கு அவர் குறிப்பாக பெண்களிடமிருந்து பாலியல் உதவியை நாடி வந்ததாக தெரிகிறது. 


இதுகுறித்து மீடியா பகுதி காவல்துறையினருக்கு ஒரு ரகசிய புகார் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த மருந்தகத்தை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது அந்த மருந்தகத்திற்கு பெண் ஒருவர் ரகசியமாக வந்துள்ளார். அவர் மறைந்த காவல்துறை அதிகாரிகளை பார்த்து பதட்டமாக கடைக்குள் மீண்டும் சென்றுள்ளார். அதன்பின்னர் கடையின் உரிமையாளர் பிரையன் வெளியே வந்து அங்கு இருந்த காவல்துறையினரிடம் பேசியுள்ளார். அப்போது அவரிடம் உண்மை எதுவும் கூறாமல் காவல்துறையினர் சென்றுள்ளனர். 




மீண்டும் அந்தப் பெண் பின்தொடர்ந்து காவல்துறையினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அப்போது அவரிடைய மொபைல் போனையும் வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் பல முறை அவர் மருந்தக உரிமையளர் பிரையனிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது தெரியவந்தது. இதை வைத்து காவல்துறையினர் அவருடைய மருந்தகத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக வந்த ஆர்டர்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் அதிகமாக தடைசெய்யப்பட்ட போதை பொருளை பிரையன் வாங்கியுள்ளது கண்டறியப்பட்டது. 


இந்த தகவலை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் பிரையன் மற்றும் அந்தப் பெண் ஆகியை இருவரையும் தனித் தனியாக விசாரித்துள்ளனர். இருவரும் மாறி மாறி கூறிய பதில்கள் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்பு அந்த பெண்ணிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது அவருக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாகவும் கூறினார். அதற்கு பிரையன் இடம் போதை பொருள் வாங்க அடிக்கடி வருவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். 




மேலும் அப்படி போதை பொருளை தருவதற்கு பிரையன் தன்னுடன் உடலுறவு வைத்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துள்ளார். இதனால் அவரும் 81 வயது நபருடன் உடலுறவு வைத்துள்ளதாக கூறியுள்ளார். அவரின் வாக்கு மூலத்தை வைத்து காவல்துறையினர் பிரையன் இடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அனைத்தையும் மறுத்து வந்தார்.  அந்தச் சூழலில் காவல்துறைக்கு இவரால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதையும் வைத்து காவல்துறையினர் பிரையனை மடக்கிய போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். வரும் நவம்பர் 17ஆம் தேதி இவரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:  விமானம் ரத்தானால் என்ன பண்ணுவீங்க...? தலைவன் வேறு ரகம் பார்த்து உஷாரு!