Watch Video: அமெரிக்காவில் 12 வயது சிறுமியை பள்ளி பேருந்தில் ஓட்டுநர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.


அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளி பேருந்தில் மாணவர்கள் பயணித்து கொண்டு வந்திருந்தனர். அப்போது ஒரு இடத்தில் பேருந்து ஒரு மாணவரை இறக்கிவிடுவதற்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதே இடத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் ஏறினார். பேருந்திற்கு  உள்ளே வந்ததும், வெளியே இருக்கும் அவளது சகோதரனிடம் பேருந்து ஜன்னல் வழியாக பேசிக் கொண்டிருந்தார்.


அப்போது, பேருந்து ஓட்டுநர் அந்த சிறுமியை அமர சொல்லி, பின்பக்கத் தோளில் தட்டி கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பின்பு அந்த சிறுமி அதை கேட்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆத்திரம் அடைந்த பெண் ஓட்டுநர் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளார்.  அந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






அந்த சிறுமியின் முகம், கைகளில் பரன்டியதாகவும், உடல், முகத்தில் பெண் ஓட்டுநர் கடித்ததாகவும் கூறப்படுகிறது. 12 வயது சிறுமிக்கும் பெண் ஓட்டுநருக்கும் ஏற்பட்ட தகராறு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்த பள்ளி பேருந்தில் இருந்த குழந்தைகள் அனைவரும் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கப்பக்கத்தினர் பள்ளி நிர்வாகத்துக்கும், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.


இதில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் பெண் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க


Elon Musk: ”ட்விட்டரை ஏன் நான் வாங்கினேன்?” மனம் திறந்த எலான் மஸ்க்


Delhi - Jaipur Accident : டெல்லி ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை விபத்து.. ஒருவர் மரணம்.. 15 பேர் படுகாயம்.. என்ன நடந்தது?