தாயின் அன்புக்கு எல்லையே இல்லை என்பார்கள். அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும்தான் என்று புரிய வைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தாய் தனது குட்டியை காக்க எந்த எல்லைக்கும் செல்லும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி நாம் பார்க்கிறோம். அதேபோல, தாய் மான் ஒன்று தன் குட்டியை பாதுகாக்க ஒரு குள்ளநரியுடன் போராடும் மனதை உருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
குட்டியை காப்பாற்ற போராடும் மான்
47-வினாடிகள் பதிவாகியுள்ள இந்த வீடியோவில், குள்ளநரி ஒன்று ஒரு குட்டி மானை குறிவைத்து கிட்டத்தட்ட இரையாக மாற்றும் நிலையில் இருந்தது. ஆனாலும் மனம் தளராத தாய் மான், தனது குட்டியை பாதுகாக்க வீரியத்துடன் போராடுகிறது. அப்போதுதான் அந்த இடத்தில் ஒரு போர் உருவாகிறது. ஆனால் எப்படியோ தாய் மான் அந்த குள்ள நரியை அங்கிருந்து விரட்டி, தன் குட்டியை பாதுகாத்தது. கீழே அந்த குட்டி மான் துடித்துக் கொண்டிருப்பது வீடியோவில் தெரிகிறது.
தீயாக பரவிய வீடியோ
இந்த வீடியோ இணையத்தில் வெளியானவுடன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தீயாக பரவியது. வீடியோவில் இருக்கும் உணர்ச்சி பல பார்வையாளர்களை தாக்கியது. இந்த வீடியோ தற்போது பார்வையாளர்களை வியக்க வைத்தது மட்டுமின்றி, அந்த தாய் மான் குறித்து நெகிழ்ச்சிகளும் குவிந்து வருகிறது. அதில் ஒருவர், "தாய்ப் பாசமும், குட்டிகளைப் பாதுகாக்கும் உள்ளுணர்வும் தாயை நரிக்கு எதிராக கடுமையாகப் போராட வைத்தது." என்றார். மற்றொருவர், "இந்த வீடியோ காப்பாற்ற வேண்டும் என்ற தாயின் உள்ளுணர்வின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டை காட்டுகிறது. இயற்கை அழகாகவும் இருக்கும்” என்று எழுதினார்.
விலங்குகள் வாழ்வு
காடுகளில், தாய் மான்கள் தங்கள் வாழ்வின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், தங்கள் குட்டிகளை பாதுகாக்கவும் கடினமாக போராடவேண்டிய சூழலை அடிக்கடி எதிர்கொள்கின்றன. இருப்பினும், இந்த குறிப்பிட்ட வீடியோவில் உள்ள தாய் மான், வேட்டையாடும் விலங்குக்கு இடம் கொடுக்காமல் கடுமையாக பாதுகாக்கிறது. ப்ரூட்டல் சைட் ஆஃப் நேச்சர் என்னும் பக்கத்தால் ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ, உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து பிரமிப்பையும் பாராட்டையும் பெற்ற நிலையில் பல லைக்குகளையும் பெற்றது. பலர் குழந்தையைப் பாதுகாக்கும் தாயின் அன்பின் வலிமையை அனைவரும் மெச்சுகிறார்கள்.