டைட்டானிக் கப்பலை தேடிய பயணத்தில் ஒரு நீர்மூழ்கி கப்பல் ஐந்து பேருடன் வெடித்து துகளானது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. செய்தி வெளியாகும்போது வெறும் 30 மணி நேர ஆக்சிஜன் மட்டுமே மீதமிருக்க வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அந்த நேரத்தை கடந்துவிட்டதால், அவர்கள் ஏதேனும் தீவுகளில் சிக்கியிருந்தாலே ஒழிய உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்ற செய்திகள் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு அச்சம் இருந்ததால் அந்த பயணத்தில் இருந்து விலகிய ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் என்னும் பெயர் கொண்ட கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, மேற்கொண்ட தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.



டைட்டானிக் கப்பலை பார்க்க செல்லும் டைட்டன்


இந்த கப்பல் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் இப்போது வரை மூழ்கி கிடக்கிறது. இந்த கப்பல் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் டைட்டானிக் என்ற பெயரில் வெளிவந்தது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இதனால் நீர்மூழ்கி கப்பலில் சென்று, ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலா பயணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன் கேட் என்ற நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்காக 21 அடி நீளத்தில் டைட்டன் என்ற சிறப்பு நீர்மூழ்கி தயாரிக்கப்பட்ட நிலையில், ஒரு கைடு மற்றும் மூன்று பணக்காரர்கள் பல ஆண்டுகள் முன்பு மூழ்கி கடலுக்குள் இருக்கும் டைட்டானிக் கப்பலை கான சென்றுள்ளனர். இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஒரு பைலட் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.


தொடர்புடைய செய்திகள்: Vijay Kutty Story Round up: விஜய்யின் குட்டி ஸ்டோரீஸ் ஞாபகம் இருக்கா... இதோ குட்டி கதைகளின் ரவுண்டு அப்!


வெடித்து துகளான நீர்மூழ்கிக் கப்பல்


இதில் செல்ல ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம். இது கடலில் 13,000 அடி ஆழம் வரை செல்லும் திறன் படைத்தது என்று கூறப்படுகிறது. ஆனால் பயணத்தின்போது சோகமாக அகோர முடிவை தேடிக்கொண்டது. நியூஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸிலிருந்து சுமார் 435 மைல்கள் தெற்கே இருந்த போது, டூர் ஆபரேட்டர்களுடனான தொடர்பை இழந்தது. இந்த கப்பலில் செல்ல, பிரிட்டிஷ் கோடீஸ்வரரும், கிறிஸ் பிரவுனின் நெருங்கிய நண்பரும் ஆன ஹமிஷ் ஹார்டிங், பயணத்தில் ஒரு இடத்தைப் பதிவு செய்திருந்தார். 



பணத்தை திருப்பி கேட்ட பிரவுன்


இந்த நிலையில் தீவிர பாதுகாப்புக் காரணங்களால், மோசமான டைட்டானிக் பயணத்திலிருந்து பிரித்தானியாவைச் சேர்ந்த கிறிஸ் பிரவுன் விலக முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பணம் கட்டி ஒரு சீட்டை புக் செய்த அவர், நீர்மூழ்கிக் கப்பலின் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கூர்ந்து ஆராய்ந்தபோது மனம் மாறியதாக தற்போது தெரிவித்துள்ளார். நீர்மூழ்கிக் கருவியின் கட்டுப்பாடுகள், கணினி கன்சோலில் இருப்பதையும், அந்த கப்பல் பழைய இரும்பு பைப்களால் தயாரிக்கப்பட்டிருப்பதையும் கண்டு, அதில் பாதுகாப்பு குறைவு இருப்பதையும் உணர்ந்த பிரவுன் அங்கு செல்லும் திட்டத்திற்கு மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரவுன், "உங்கள் சொந்த நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க முயற்சித்தால், பழைய இரும்பு கம்பங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இது ஒரு தொழில். இதில் எப்படி? அதனால், நான் அவர்களுக்கு மெயில் செய்தேன். என்னால் இனி இந்த விஷயத்தில் இதற்கு மேல் நம்பிக்கை செலுத்தி செயல்பட முடியாது என்று, பணத்தைத் திரும்பக் கேட்டேன்." என்று கூறினார்.