Vodofone Layoffs : இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் வருங்காலத்தில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில், முதல் 3 இடங்களில் தொடர்ந்து வகித்து வருகிறது வோடாபோன் ஐடியா நிறுவனம். 24 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள இந்த நிறுவனம், விரைவான இணைய சேவையை வழங்குவதில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் 5ஜி சேவையை வழங்குவதற்கான பணியை அந்நிறுவனம் விரைவுபடுத்தியுள்ளது.
பணிநீக்கம்
இந்நிலையில், நிறுவனத்தின் பங்கின் விலை குறைந்து வருவதால், 11 ஆயிரம் ஊழியர்களை குறைக்கப்போவதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுபற்றி வோடபோன் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி மார்குரைட் டெல்லா வாலே, (Margherita Della Valle) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "வோடபோனில் சில விதிகளை மாற்றி அமைக்க முடிவு செய்திருக்கிறேன். என்னவென்றால் நிறுவனத்தின் செயல்திறன் போதுமானதாக இல்லை. இதனால் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சில மாற்றங்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் கொண்டு வரப்பட இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் எளிதாக பயனளிக்கும் வகையில் சில திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பெரும் இழப்பு மற்றும் சந்தையில் பங்குகள் ஏற்றம் அடைய நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தரமான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சந்தையில் பங்குகள் வளர்ச்சி அடைய அனைத்து விதமான நடவடிக்கையை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
மேலும், வரும் நிதியாண்டில் வருவாய் வளர்ச்சி குறைவாக இருக்கும் அல்லது வருமானம் பெரும் அளவில் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவுகளை குறைக்கும் நோக்கில் வோடபோன் நிறுவனத்தின் ஊழியர்கள் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
காரணம்
வோடபோனின் நிதிச் செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதால், கடந்த ஆண்டு நிறுவனத்தின் வருவாய் 14.7 பில்லியன் யூரோக்கள் சரிவடைந்துள்ளது. இதனால் செலவுகளை குறைக்கவும், வாடிக்கையாளர் வளர்ச்சி மந்தநிலையில் இருப்பதால் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டதாக வோடபோன் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
மேலும், பெரும் இழப்பு மற்றும் சந்தையில் நிலவும் போட்டி காரணமாக வோடாபோன், ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் அண்மையில் இணைந்து வோடாபோன் ஐடியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய நிறுவனத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு 27 சதவீதமும், வோடபோன் நிறுவனத்துக்கு 45 சதவீதமும் பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனாலும்,. பெரும் கடன் காரணமாக அந்நிறுவனத்தின் நிலை தற்போதும் மோசமாகவே தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க