Mexico Gun Shot : மெக்சிகோவில் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு தெருவில் இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவை அடுத்து அதன் அண்டை நாடான மெக்சிகோவிலும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. சமீபத்தில் மெக்ஸிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய ஆண்டுகளில் மெக்சிகோவில் குவானாஜுவாடோ நகரம் மிகவும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் திருடப்பட்ட எரிபொருளை கடத்தும் கும்பல்களால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3 பேர் உயிரிழப்பு
அந்த வகையில் மெக்சிகோ பார்மிங்டன் நகரில் உள்ள குடியிருப்பு தெருவில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு 9 மணியளவில் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர் . கண்மூடித்தனமான தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த இளைஞர் அதிகாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் உட்பட பலரும் படுகாயமடைந்தனர். தெருவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனை அடுத்து காயமடைந்தவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்தவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிக்கு மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படை பிரிவுகள் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர். மெக்சிகோவின் தொழில்துறை மையமான பார்மிங்டன் பகுதியில், சமீபத்திய ஆண்டுகளில் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது. மெக்சிகோவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த ஆயுதங்களை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க