சாலையில் அதிவேகத்தில் ஓடும் நெருப்புக்கோழியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
பிஸியான சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு நெருப்புக்கோழி ஓடி பார்த்தது உண்டா? அப்படியான சம்பவம் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது. காரும், பைக்கும் செல்லும் பிஸியான சாலையில் நடுவே அதிவேகத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது நெருப்புக் கோழி. பாகிஸ்தானில் உள்ள லாகூரின் கேனல் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக பாகிஸ்தான் மீடியா தெரிவித்துள்ளது. இணையத்திலும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள ARY நியூஸ், இரண்டு நெருப்புக் கோழிகள் சாலையில் ஓடியதாகவும் அதில் ஒன்று பிடிக்கும் முயற்சியில் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மற்றொன்று தான் சாலையில் ஓடியுள்ளது. எங்கிருந்தோ இது தப்பித்து ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Watch Video: சிரிச்சு சிரிச்சு முடியல... வான்கோழிகளுக்கு மத்தியில் ரிப்போர்ட் செய்த செய்தியாளர்!
இதேபோல் ஏற்கெனவே ஒரு சம்பவம் நடந்துள்ளதாகவும், மிருகக் காட்சி சாலையில் இருந்து ஒரு நெருப்புக் கோழி தப்பித்து ஓடியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நெருப்புக்கோழி பயத்தில் ஓடுவதாகவும், வாகனங்களின் இரைச்சல் அதனை திக்குமுக்காட வைப்பதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இது பறவைக்கு எதிரான கொடுமை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி வாழும் பறவைகளுள் மிகப்பெரியது பறவையாகும். இது 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத ரடீட் எனப்படும் ஒப்பீட்டளவில் பழமையான பறவைக் குழுவைச் சேர்ந்தது ஆகும். நெருப்புக்கோழிகள் நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. 70 கிமீ/மணி (43 மைல்/மணி) வேகத்தில் ஓடக்கூடியவை.
Migration Of Birds | எதிர்கால ஆபத்து இதுதான்... உலகுக்கு வலசை பறவைகள் கொடுக்கும் பகீர் எச்சரிக்கை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்