அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த ஒரு பெண்ணின் வெறுப்பால் இரு பெயிண்டர்கள் உயிருக்கு ஊசலாடி தப்பித்த சம்பவம் பாங்காக்கில் நடந்துள்ளது.


தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 40 மாடிகளுக்கு மேல் கொண்ட அந்த அடுக்குமாடியின் 32 வது மாடியில் உள்ள ஒரு ஜன்னல் கண்ணாடியில் தெரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்காக பாதுகாப்பு கையிறு உதவியுடன் இரு ஊழியர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். வேலையை முடித்துவிட்டு அவர்கள் 30வது மாடியை நெருங்கியபோது அவர்கள் கட்டியிருந்த பாதுகாப்பு கையிறு வலுவிழந்ததாக தெரிந்துள்ளது. என்னவென்று கீழே பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 


>> Watch Video | கால்கள் இல்லை; நம்பிக்கை இருக்கு- ஜிம்னாஸ்டிக் செய்யும் சிறுமியின் வைரல் வீடியோ !


ஒரு பெண் 21 வது மாடியின் ஜன்னல் வழியாக அந்த கையிறை அறுத்துக்கொண்டு இருந்துள்ளார். உடனடியாக இருவருமே உதவிக்காக அலறியுள்ளார். ஆனால் வேறு யாருமே அருகில் இல்லை. கட்டிடத்தின் உச்சியில்  நின்ற மற்றொரு ஊழியர் தன்னால் முடிந்த உதவியை செய்யத் தொடங்கியுள்ளார். ஆனால் எதுவுமே வேலைக்கு ஆகாது என உணர்ந்த ஊழியர்கள் 26 வது மாடி அருகேயுள்ள ஜன்னல் வழியாக உதவியைக் கேட்டுள்ளனர். ஏதோ அவசரம் என உணர்ந்த 26வது மாடியில் வசித்தவர்கள் ஜன்னலை திறந்து ஊழியர்களை காப்பாற்றியுள்ளனர். 




இது தொடர்பாக ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது கயிறை அறுத்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையின் போது முதலில் குற்றச்சாட்டை மறுத்த பெண், பின்னர் கயிறை அறுத்தேன் என்றும் ஆனால் அவர்களை கொலை செய்யும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


இரண்டு தலைகள்.. பன்றி உடல்..பிறழ்வு குறைபாட்டுடன் பிறந்த கன்றுக்குட்டி மரணம்.. சோகத்தில் குடும்பம்.


ஜன்னல் வழியாக கயிறு தொங்கவிடப்பட்டு வேலை பார்த்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் இப்படி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தக் குற்றத்துக்காகவும், கொலை செய்ய முயற்சி செய்ததற்காகவும் அப்பெண்ணுக்கு 20 வருட சிறைதண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ஊழியர்களை காப்பாற்றிய அந்தக் குடும்பத்தினருக்கும் இணையத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண