ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று ஒரு பழமொழி உள்ளது. அந்த பழமொழிக்கு ஏற்றவாறு சிறுமி ஒருவர் செய்யும் ஜிம்னாஸ்டிக் ஸ்டெண்ட்ஸ் நம்மை மிகவும் வியப்பு அடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஸ்டெண்ட் தொடர்பாக பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் மேக் ஹெசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரூனோ என்ற ஒருவர் பதிவிட்ட வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் தன்னுடைய உடம்பை வில்லாக வளைத்து செய்யும் ஸ்டெண்ட்ஸ் நம்மை வாய் அடைக்க வைக்கும் வகையில் உள்ளது. 


 






இந்த வீடியோவை தற்போது வரை 1.7 மில்லியன் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் இதை பலரும் லைக் செய்து வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை பார்த்து பலரும் வியப்புடன் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சிலர் இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒரு சிறுமிக்குள் இவ்வளவு திறமையா என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒருவர் இந்த சிறுமி வருங்காலத்தில் இவர்  ஒலிம்பிக் பதக்க வெற்றியாளராக வருவார் என்று பதிவிட்டுள்ளார். 


 






 






 






 






 






 






இவ்வாறு பலரும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 'நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை'- திமிங்கலமும் கடற்பறவையும் வைரல் வீடியோ !