சமூகவலைதளங்களில் எப்போதும் குழந்தைகள் செய்யும் குறும்புகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அதேபோல் செல்லப்பிராணிகள் தொடர்பான வீடியோவாக இருந்தாலும் அதுவும் நல்ல வியூஸ் போகும். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வேகமாக வைரல் அடைய  தொடங்கியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு குழந்தையும் நாய்க்குட்டியும் உள்ளனர். இதனால் அந்த வீடியோ தற்போது அனைவரையும் ஈர்த்துள்ளது. 


இந்த வீடியோ ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "இந்த வீடியோ பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக உள்ளது. குறிப்பாக அந்த நாய்க்குட்டியின் வாலை பாருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோவில் ஒரு சிறுகுழந்தை நாய்க்குட்டியை பாசமாக கட்டி அணைத்து கொஞ்சுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை பார்க்கும் போதே நமக்கு ஒரு விதமான ஆனந்த எண்ணம் வருகிறது. இந்த வீடியோவை தற்போது வரை 6ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். 


 






மேலும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் இந்த வீடியோ மிகவும் அழகாக உள்ளது. இது ஒரு கியூட்டான வீடியோ என்றும் பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 


மேலும் படிக்க:உலகளவில் பரபரப்பை உண்டாக்கிய சீனாவின் மீ டூ புகார்! நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுதான்!