சீனாவில் பரபரப்பை உண்டாக்கிய தொலைக்காட்சி தொகுப்பாளரின் மீ டூ புகாரை பீஜிங் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லை என தீர்ப்பில் கூறியுள்ளது நீதிமன்றம்.
சீனாவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஷியான்ஸி. இவர் ஷூ ஜுன் என்பவருக்கு எதிராக மீ டூ புகாரை தெரிவித்தார். 2018ம் ஆண்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர், 2014ம் ஆண்டு தொலைக்காட்சியில் இண்டர்னாக சென்றபோது ஷூ ஜுன் என்பவர் தனக்கு முத்தம் கொடுக்க முயன்றதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்தப்புகாரை ஷூ ஜுன் எதிர்த்தார். சோஷியல் மீடியோவோடு நின்றுவிடாமல் இந்தப்புகார் நீதிமன்றம் படியேறியது. இந்த விவகாரத்துக்கு பிறகே மீ டூ என்ற விவகாரமும் உலகளவில் பெருகியது. குறிப்பாக சீனாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக பல நடவடிக்கைகள் சட்ட ரீதியாக எடுக்கப்பட்டது.
இதற்கு பின்பே,பெண்கள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்களை மீ டூ வின் கீழ் பதிவு செய்தனர். இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட மீ டூ புகார்கள் பரபரப்பை கிளப்பின. பணிபுரியும் துறையிலும், பணி சார்ந்த இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை பெண்களே வெளிக்கொண்டு வந்தனர். மீ டூ புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும் புகார் கொடுக்கும் பெண்களுக்கு எதிராகவும் பலர் கருத்து தெரிவித்தனர். பல வருடங்கள் கழித்து சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இருக்குமென கேள்வி எழுப்பினர்.
எந்நேரமும் காம சிந்தனை... 20 ஆண்டில் 34 பாலியல் குற்றம் செய்த காம கொடூரன் ரொனால்டு ஜெரேமி!
இந்நிலையில் தொடக்கப் புள்ளியான ஷியான்ஸியின் புகாரும் தற்போது நீதிமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. அந்தப்புகாரை விசாரித்த பீஜிங் நீதிமன்றம், ஷியான்ஸியின் புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு ஷியான்ஸி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஷூ ஜுன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இது குறித்து பேசிய ஷியான்ஸி, இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து வீடியோவில் பேசியுள்ள அவர், என்னால் எதுவும் முடியாதமாதிரி உணர்கிறேன். கடந்த 3 ஆண்டுகள் எனக்கு கடினமாக காலமாகவே இருந்தது. என்னால் இன்னும் 3 ஆண்டுகள் இப்படி கடக்க முடியாது என்றார். இதற்கிடையே தன் மரியாதையைக் கெடுக்கும் நோக்கில் வழக்கு தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக ஷியான்ஸி மீது ஷூ ஜுன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முடி எங்கடா... அது ஓல்டு மாடல்... அதுக்கு பதிலா செயின் நட்டாச்சு! - ராப் பாடகரின் வைரல் சம்பவம்!