சர்வதேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமானது பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளன. இந்த நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுவது வழக்கம். விண்வெளி குறித்து ஒவ்வொரு தகவலும் நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிறது. விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அடிக்கடி அங்குள்ள நிலையை படம் பிடித்து அனுப்பி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரும்  சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), தொடர்ந்து பூமியை சுற்றி வருகிறது ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.  



நாசா அளித்த தரவுகளின்படி, ISS (சர்வதேச விண்வெளி நிலையம்) 109 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்டது, இது ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் நீளத்தைப் போன்றது, அதன் எடை 420 டன். இது பூமியைச் சுற்றி அதிவேகத்தில் பயணிக்கிறது. ISS பூமியை ஒரு மணி நேரத்திற்கு இருபத்தேழாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது, இதனால் 90 நிமிடங்களில் ஒரு முழு வட்டத்தை சுற்றி முடிக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையம் தினமும் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது என்றும் இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 முறை சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கின்றனர் என நாசா (NASA) தெரிவித்துள்ளது. 


அதாவது தினமும் 45 நிமிடங்கள் இடைவெளியில்,  சூரியம் உதித்து மறைகிறது. நாசா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) ஒரு ட்வீட்டில் இது தொடர்பான அற்புதமான வீடியோவை வெளியிட்டுள்ளார். விண்வெளி வீரர்கள் வெப்பநிலை வேறுபாட்டை உணர்கிறார்களா என்று ஆச்சர்யமாக ட்விட்டர் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.



விண்வெளி வீரர்கள் அகிகிகோ ஹோஷைட் மற்றும் தாமஸ் பெஸ்கெட் ஆகியோர் விண்வெளி பயணத்தை முடித்த பிறகு, நாசாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வட்ட உரையாடல் அமர்வில் இந்த செய்தி வெளியிட்ட பிறகு, இந்த ஸ்வாரஸ்யமான விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஸ்காட் கெல்லி மற்றும் விக்டர் குளோவர் உட்பட பல விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து இருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் படங்களை மக்களுக்காக வெளியிட்டுள்ளனர்.