குழந்தைகள் எப்போதும் மொட்டை அடிப்பது, காது குத்துவது, முடி வெட்டுவது போன்ற தருணங்களில் அதிகமாக அழத் தொடங்குவார்கள். அந்த சமயத்தில் குழந்தைகளை சமாதானம் செய்வது சற்று கடினமான ஒன்று தான். அவர்களுக்கு பிடித்த விஷயம் எதாவது ஒன்றை காட்டி அந்த அழுகையை நிறுத்த வேண்டும். அப்படி ஒரு முடி திருத்தும் கடையில் குழந்தை ஒன்று முடி வெட்டும் போது அழுதுள்ளது. அக்குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"இந்த குழந்தை முடி வெட்டும் போது மிகவும் பதற்றம் மற்றும் பயம் அடைந்து அழுதது. அதற்கு அங்கு இருந்த முடி திருத்தும் நபர்கள் அனைவரும் பாட்டு பாடி குழந்தையை மகிழ்ச்சி அடைய செய்து அந்த அழுகையை நிறுத்தினார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் அந்த குழந்தை அழுவதையும் அதை அந்த நபர்கள் பாட்டு பாடி நிறுத்தும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 


 






அந்த வீடியோவை தற்போது வரை 5.7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக பல நெகிழ்ச்சியான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அந்த நபர்களின் செயல் பார்க்கவே எவ்வளவு கியூட்டாக உள்ளது. இதை பார்க்கும் போது அவ்வள்ளவு அழகாக உள்ளது போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






 






 






இவ்வாறும் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க:ட்வின் டவர் தாக்குதலின்போது பார்வையற்ற உரிமையாளரை காப்பாற்றிய செல்ல நாய்.. ஒரு நெகிழ்ச்சி கதை