புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை சார்பில், நியூமோகாக்கல் தடுப்பூசி புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் - குழந்தைகள் மருத்துவமனையில் சனிக்கிழமை முதல் செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை சார்பில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், புதிதாக நியூமோகாக்கல் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது வரை தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், குழந்தைகளைத் தாக்க கூடிய மிகத் தீவிரமான 10 நோய்களுக்கான தடுப்பூசிகளை புதுச்சேரி அரசு இலவசமாக அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கி வந்தது.


History Of Hyundai : 25ம் ஆண்டில் ஹூண்டாய்.. இந்தியாவில் நம்பர் 2.. எப்படி நடந்தது இந்த மேஜிக்..?


நியூமோகாக்கல் நோயானது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக் காய்ச்சல், காதுகள் வழி பரவும் பாதிப்பு ஆகியவற்றுடன் ரத்தத்தில் கலக்கும் போது, மிகத் தீவிர நோயாக மாறி, குழந்தையின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணி புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிர் - குழந்தைகள் மருத்துவமனையில் தொடங்கப்பட்டு  உள்ளது. விலை உயா்ந்த தடுப்பூசியான இந்தத் தடுப்பூசியை புதுச்சேரியில் இலவசமாக தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருவதாக புதுவை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


History of Ford India : கணக்குப் பார்த்த இந்தியர்கள்.. கடையை சாத்திய ஃபோர்ட் | Ford Tamilnadu


புதுச்சேரியில் முதன் முறையாக இலவசமாக நியுமோகாக்கல் தடுப்பூசி: ஆளுநர், முதல்வர் தொடங்கி வைப்பு


புதுச்சேரியில் முதன் முறையாக நியுமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணியை, துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நியுமோகாக்கல் நோயானது 5-வயது உள்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல், காதுகள் பாதிப்பு ஆகியவற்றோடு இரத்தத்தில் கலக்கும் பொழுது, மிக தீவிர நோயாக மாறி குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக நேரலாம். இவ்வாறான தீவிர நோயான நீமோகாக்கல் நோய் வராமல் தடுப்பதற்காக, குழந்தைக்கு செலுத்தப்படும் தடுப்பூசியே (பிசிவி) எனும் நீமோகாக்கல் தடுப்பூசியாகும்.


Seeman Speech : திமுகவில் இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் - சீமான்




 


புதுச்சேரியில் இத்தடுப்பூசி செலுத்தும் பணியை, எல்லைபில்லைச்சவடி பகுதியில் அமைந்துள்ள அரசு குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவ மனையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் தடுப்பூசி செலுத்தும் பணியினை சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி வைத்தனர். இந்த தடுப்பூசி திட்டமானது 6 வாரங்கள், 14 வாரங்கள், 40 வாரங்கள் போன்ற மூன்று கால அளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


Abp Explainer: சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படாதது ஏன் தெரியுமா?