5 ஆண்டுகளாக காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்ட ஹனா சம்சனோவா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 


தொழில்நுட்பங்கள் தொடங்கி பல விதமான மாற்றங்களை கண்டுள்ள நம் சமூகத்தில் உணவு விஷயங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? .. உள்ளூர் முதல் வெளிநாடு உணவுகளை வரை கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கிறது. அதேசமயம் உடல் எடை, ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக பல விதமான டயட்டுகளை பின்பற்றி வருகின்றனர். அதில் ஒன்று தான் வீகன் டயட். இதில் பால் சார்ந்த பொருட்கள், விலங்குகளிடமிருந்து பெறப்படும் உணவுகளை தவிர்த்து முற்றிலும்  தாவர உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். 


இப்படியான வீகன் டயட் முறையில் பிரபலமானவர் ரஷியாவைச் சேர்ந்த 39 வயது பெண்ணான ஹனா சம்சனோவா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக பழங்கள், காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டும், ஜூஸாக பருகியும் வாழ்ந்து  வந்தார். அவரின் சொந்த நாட்டில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு சென்றாலும் அங்கும் இதே டயட் முறையை தான் பின்பற்றினார். மேலும் இந்த டயட்  மூலம் கிடைக்கும் பலன்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வந்தார். இவருக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். 


இதற்கிடையில் சம்சனோவா தனது உணவு கட்டுப்பாட்டு முறையில் கடந்த சில மாதங்களாக மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இதன் காரணமாக அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதில் உடல் எடை குறைந்து மெலிந்த நிலைக்கு தள்ளப்பட்டார். இதனிடையே  தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஹனா சம்சனோவா கடந்த ஜூலை 21 ஆம் தேதி உயிரிழந்தார்.


பட்டினி மற்றும் மனசோர்வு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதேசமயம் தொடர்ச்சியாக பச்சை காய்கறிகளை உட்கொண்டதால் அவரின் உடல் ஒத்துழைக்காமல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மகளின் உடலை ரஷியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளும்படி ஹனாவின் தாயார் ரஷ்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 


சில நாட்களுக்கு முன் ஹனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியொ ஒன்றை வெளியிட்ட ஹனா, உடல் எடையை அதிகரிக்க நேரம் வந்து விட்டது என தெரிவித்திருந்தார். வீகன் டயட் பிரபலம் ஹனா மரணம் அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் படிக்க: கொடூர பாலியல் வன்கொடுமை.. மகளிடம் அத்துமீறிய தந்தை.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்..


'புஷ்பா' பட பாணியில் ரகசிய அறை அமைத்து சந்தனக்கட்டைகள் கடத்தல் ; போலீஸ் மடக்கி பிடித்தது எப்படி?