இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர்மூன ( Supermoon) இன்று வானத்தில் தோன்ற இருக்கிறது. ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வரும், இதன் காரணமாக வானத்தில் மிகப்பெரிய சூப்பர் மூன் தோன்றும்.
வானில் நிகழ்பவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். அவற்றில் சிலவற்றை நம்மால் கண்டு ரசிக்க முடியும். அப்படியான ஒன்றுதான் இன்று வானில் நிகழவிருக்கிறது. பூமிக்கு மிக அருகில், சந்திரன் வர இருக்கிறது. முழு நிலவு ஓரிரு நாட்களுக்குத் தோன்றினாலும், முழுமையும் தெரிவது என்பது சில மணிநேரங்கள் மட்டுமே என்று கூறப்படுகிறது. இது இந்தாண்டில் இரண்டாவது சூப்பர் மூன் ஆகும்.
Sturgeon Moon
இன்று வானில் தோன்றும் சூப்பர் மூன் 'Sturgeon Moon’ என்றழைக்கப்படுகிறது, ஏனெனில், வட அமெரிக்காவில் உள்ள ஏரில் ஒன்றில் மிகப்பெரிய மீன் வகையான ’Sturgeon' இந்த சமயத்தில் மிக அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
சூப்பர் மூன் என்றால் என்ன?
சூப்பர் மூன் என்றால் சந்திரன் முழு நிலவு நாளன்று முன்பை விட சற்று பெரியதாகவும், முன்பு பார்த்ததை விட சற்று பிரகாசமாகவும் தோன்றும்.
இந்த நிகழ்வு பெரிஜி எனப்படும் அதன் சுற்றுப்பாதையில் சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால் ஏற்படுகிறது. சூப்பர் மூன் என்ற சொல் 1979 ஆம் ஆண்டில் வானியல் ஆய்வாளர் ரிச்சர்ட் நோல்லே என்பவரால் உருவாக்கப்பட்டத. மேலும் சந்திரன் 90 சதவிகிதம் பெரிஜிக்குள் இருக்கும்போது நிகழும் புதிய அல்லது முழு நிலவை சூப்பர் மூன் என விளிக்கப்படுகிறது. இது பூமிக்கு மிக 357,530 கி.மீ. அருகில் உள்ளது.
இன்று காணப்படும் சூப்பர் மூன் இந்த ஆண்டின் மிகப்பெரியதாக இருக்கும், மேலும் இது பக் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. நேரம் மற்றும் தேதியின்படி, ஆண்டின் இந்த நேரத்தில் மான்களின் நெற்றியில் இருந்து வெளிப்படும் கொம்புகள் காரணமாக இந்த முழு நிலவுக்கு பக் நிலவு என்று பெயர் வழங்கப்பட்டது.
தண்டர் மூன், ஹே மூன் மற்றும் வைர்ட் மூன் என உலக முழுவதும் இது பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேலும் பூர்வீக அமெரிக்கர்கள் இதை சால்மன் மூன், ராஸ்பெர்ரி மூன் மற்றும் அமைதியான நிலவு என்றும் அழைக்கிறார்கள்.
எப்போது பார்க்கலாம்?
இந்த நிகழ்வை 18:31 UTC ஆகஸ்ட்1-ம் தேதி அதோடு, ஆக்ஸ்ட் -2 ம் தேதி (12:01 am IST ), according to timeanddate.com -ல் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நாட்களை விட 14% அளவில் பெரியதாகவும், 30% கூடுதல் பிரகாசமாகவும் நிலா காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே மாதம் 31-ம் தேதி நிகழ இருக்கும் சூப்பர் மூன் இந்தியாவில் பார்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=eYfm62LjWZw - என்ற இணைப்பை க்ளிக் செய்து சூப்பர் மூன் நிகழ்வை காணலாம்.