அமெரிக்காவில் வீகன் உணவுமுறையால்  ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18 மாத குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.


அமெரிக்கா:


அமெரிக்கா புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஷீலா ஓ லேரி மற்றும் ரைவ் தம்பதியினர் வீகன் உணவு முறையை, கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு  வீகன் உணவு முறையால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18 மாத குழந்தை இறந்தது. 


வீகன் உணவு முறை:


வீகன் உணவு என்பது மாமிசங்கள் மட்டுமின்றி, உயிரினங்களிடமிருந்து பெறப்படும் பால் உள்ளிட்டவைகளையும் தவிர்த்து பின்பற்றப்படும் உணவு முறையாகும். இவ்வுணவு முறையை பின்பற்றுபவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தாவரங்களிடம் இருந்து கிடைக்க பெறப்படுவதையே உண்டு வாழ்வார்கள். இது சைவ முறையானது, தீவிர சைவ முறை என்றும் கூறப்படுகிறது.




இதையடுத்து 18 மாத குழந்தை இறப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தை இறந்துள்ளது என தெரிய வந்தது. குழந்தைக்கு கடந்த சில நாட்களாக பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே கொடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் 3 குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.


ஆயுள் தண்டனை:


இவ்வழக்கானது கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது இவ்வழக்கில் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறந்ததற்கு, தாய் ஷீலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இச்சம்பவம் வீகன் உணவு முறை பின்பற்றுபவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.


Also Read: சிடிவி செய்தி தொகுப்பாளராக இருந்த லிசா லாஃப்லேம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகின்றன.


Also Read: Mikhail Gorbachev : பனிப்போருக்கு முடிவு.. மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கம்...யார் இந்த மிக்கைல் கோர்பசேவ்?