தாய்லாந்தை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், தனது சப்ஸ்க்ரைப்கர்களை ஏமாற்றி சுமார் 55 மில்லியன் டாலர்களை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
நட்டி என்று அழைக்கப்படும் நத்ஹமோன் கோங்சாக் தனது ஆயிரக்கணக்கான சப்ஸ்க்ரைப்கர்களை ஏமாற்றி சுமார் 55 மில்லியன் டாலர்களை அந்நியச் செலாவணி வர்த்தக ஊழலின் மூலம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அந்நியச் செலாவணி வர்த்தக மூலம் முதலீடு செய்யும் சப்ஸ்க்ரைப்கர்களுக்கு அதிக வருமானம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.
நத்ஹமோன் கோங்சாக், வீடியோ தளத்தில் தனது நடனத்தின் கிளிப்களைப் பகிர்ந்து சுமார் 847,000 க்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைப்கர்களை புகழ் பெற்றார்.
மக்களை கவர்ந்தவர் :
தனது நடனத்தினால் மக்களை கவர்ந்த நத்ஹமோன் கோங்சாக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அந்நிய செலாவணி வர்த்தகர்களுக்கான தனியார் படிப்புகளை விளம்பரப்படுத்தினார். தொடர்ந்து, தனது பாலோவர்களின் முதலீட்டில் வருமானம் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து, 6,000 க்கும் மேற்பட்டோர் நத்தமோனுக்கு முதலீடு செய்ய பணம் கொடுத்துள்ளனர். சிறிது நாட்களில் முதலீடு செய்தவர்களுக்கு எந்த்வொரு பணமும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த 1000 திற்க்கு மேற்பட்ட பாலோவர்கள் தாய்லாந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் தனது முதலீட்டில் 35% வருமானம் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாந்ததாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
நத்ஹமோன் தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், மே மாதம், முதலீட்டாளர்களுக்கு 1 பில்லியன் பாட் ($27.5 மில்லியன்) கொடுக்க தான் கடன்பட்டிருப்பதாகவும், ஒரு தரகர் தனது வர்த்தகக் கணக்கையும், நிதியையும் மார்ச் மாதத்திலிருந்து தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பணத்தைத் திருப்பிச் செலுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாலோவர்கள் நத்ஹமோனுக்கு நேரடியாக மேசேஜ் அனுப்பி, ரிப்ளை செய்யாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தனர்.
பாலோவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இணைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட தாய்லாந்து நத்ஹமோனுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்ததாக சைபர் கிரைம் புலனாய்வுப் பணியகத்தின் காவல்துறை அதிகாரி வத்தனா கெட்டம்பை தெரிவித்தார். தலைமறைவாக உள்ள நத்ஹமோனை தேடி வருகின்றனர்.
இதுவரை, மொத்தம் 30 மில்லியன் பாட் இழந்ததாகக் கூறி 102 பேரிடம் இருந்து புகார்களைப் பெற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, நத்ஹமோன் மீது பல புகார்கள் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிகிறது. மேலும், மற்ற போலீஸ் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.