காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லோ மைனா காலமானார். 


சோனியா காந்தியின் தாயார் பாவ்லோ மைனா, இத்தாலி நாட்டில் வசித்து வந்தார். பாவ்லோ மைனா வயது மூப்பு காரணமாக கடந்த பல நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி இத்தாலி நாட்டில் காலமானதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.