அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் நேற்று (ஆக.08) அமெரிக்க விசாரணை அமைப்பான FBI சோதனை நடத்தியுள்ளது. 


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ’ட்ரூத் சோஷியல் நெட்வொர்க்’ எனும் தான் சொந்தமாகத் தொடங்கிய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப் “2024ஆம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாக விரும்பாத தீவிர ஜனநாயகக் கட்சியினரின் தாக்குதல் இது.


இதற்கு முன்னால் அரசாட்சியிலிருந்த எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுபோன்று எதுவும் நடந்ததில்லை. இந்த சட்டவிரோத அரசியல் துன்புறுத்தல் அம்பலப்படுத்தப்பட வேண்டும். நீதி அமைப்பை ஆயுதமாக்கி இவர்கள் உபயோகிக்கின்றனர்” என சாடியுள்ளார்.


மேலும் படிக்க: இலங்கை : தொடர் போராட்டத்தில் இணைய நாட்டு மக்களுக்கு அழைப்புவிடுத்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக்கா


இந்த சோதனை குறித்து எஃப்பிஐ இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 


கடந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் பைடன் ஆதரவாளர்களைத்  தாக்கினர். இது குறித்து ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஜனவரி மாதம் வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் டிரம்பின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதாகவே அமைந்தன. டிரம்பை எதிர்த்து நின்ற ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். அப்போது டிரம்ப், ஜோ பைடன் தேர்தல் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகவும், அதன் அடிப்படையில்தான் அவர் வெற்றி பெற்றதாகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடத் தொடங்கினார்.


மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!


இதனால் சமூக வலைதளங்கள் அவரின் கணக்குகளை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கலாம் என முடிவெடுத்தன. அமெரிக்க நாடாளுமன்ற செனட் கூட்டத்தின்பொழுது டிரம்பின் ஆதர்வாளர்கள் , அவையில் புகுந்து வன்முறையில் ஈடுபட சிலர் பரிதாபமாக உரிரிழந்தனர். இதனை தொடர்ந்து டிரம்ப்பின் சமூக வலைத்தள கணக்குகளை ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்கள் நீக்கின.


இதனையடுத்து சொந்தமாக ’ட்ரூத் சோஷியல்’ எனும் சமூகவலைதளத்தை உருவாக்கி அதில் பொதுமக்கள் இணையவும் ட்ரம்ப் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்


Icecream Ad : ஐஸ்க்ரீம் விளம்பரத்தால் வந்த சர்ச்சை: இனிமே பெண்கள் விளம்பரத்துக்கு வேண்டாம்.. உத்தரவிட்ட அரசு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News-இல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.