குடும்பத்தில் இளையவராக இருப்பதால் பல நன்மைகள் இருந்தாலும், அதில் மிகப்பெரிய நன்மை, வெளியில் எந்த உணவுக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. உங்கள் பெற்றோர், மூத்த உடன்பிறப்புகள் மற்றும் பிற உறவினர்கள் அதைக் கவனித்துக் கொள்ள எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்.


மேலும், இந்த வழக்கத்திற்கு வீட்டின் கடைகுட்டிகள் அனைவரும் நன்கு பழகிவிட்டனர். இப்படியிருக்க, வீட்டின் முத்தவர் குழந்தைகளிடம் பணம் கேட்கும்போது, ​​அது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். சமீபத்தில் ஒரு சிறு குழந்தைக்கு இதே போன்ற சம்பவம் நடந்தது. இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு குழந்தை தனது தந்தையுடன் ஒரு உணவகத்தில் சாப்பிடுவதைப் பார்க்கலாம்.


 






கட்டணம் செலுத்த வேண்டிய நேரம் வரும்போது, ​​அவர் தனது குட்டி மகனிடம் சாப்பாட்டுக்கு எப்படி பணம் கொடுக்க போகிறாய் என கேட்பார். அப்போது, அச்சிறுவனின் முகபாவனை அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.


இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பதிவேற்றிய சமீபத்திய வீடியோவில், அவரும் அவரது மகனும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருப்பதை காணலாம். பில் வந்ததும், மகனிடம் பில்லைக் கொடுத்து, "இதைச் செலுத்த முடியுமா? இந்த முறை நீ தான் செலுத்த வேண்டும்" என்று கூறுகிறார். முதலில், அவரது மகன் கவலையாகவும் குழப்பமாகவும் இருக்கிறார். 


அப்போது தந்தை மீண்டும் அவரிடம், "நான் பணம் தரச் சொல்கிறேன். உங்களிடம் பணம் இருக்கிறதா?" பிறகு சிறுவன் சிறிது நேரம் யோசித்து, "நீங்கள் இப்போது பணம் செலுத்துங்கள், நான் வீட்டிற்கு வந்ததும் பணத்தை தருகிறேன்" என்று கூறுகிறார். மகனின் க்யூட்டான எதிர்வினையைப் பார்த்து, தந்தை வாய்விட்டு சிரித்து விடுகிறார். நகைச்சுவைக்குதான் இப்படி கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.


இந்த வீடியோ பதிவேற்றப்பட்டதிலிருந்து, 7.4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 298K லைக்குகள் பெற்றுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்து பதிவிட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண