கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதி மீதான தடையை விலக்க முடியாது என அமெரிக்க அரசு கூறியுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான சீரம் இண்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கோரிக்கைக்கு அந்நாடு இவ்வாறு பதிலளித்துள்ளது.


மேலும் தங்கள் நாட்டு மக்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருவதால் ஏற்றுமதி குறித்துத் தற்போது யோசிக்க முடியாது என அந்த நாடு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளொன்றுக்கு மூன்று லட்சத்துக்கும் மேலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நாட்டில் தொடர்ச்சியாக தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.


Also Read: TN Vaccine Shortage | தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா? உண்மை நிலை என்ன?