இரண்டு, மூன்று நாட்களில் உலகத்தில் நாம் எங்கு போக ஆசைப்பட்டாலும் அங்கு போய்விடலாம் என்ற நிலையில் இப்போது தொழில்நுட்பம் உள்ளது. ஆனால், இன்றும் கால்கள் தொடாத, வெளிக் கண்களுக்குப் படாத இடங்கள் உள்ளன. அவை என்னென்ன? எங்கு இருக்கின்றன?



  1. ஐஸ் கிராண்ட் கோவில், ஜப்பான்


மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், சில குறிப்பிட்ட பூசாரிகளுக்கும் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்ட இடம். பெரும் மதில் சுவருக்குள் மறைந்திருக்கும் முழு கட்டிட அழகைக் கூட வெளியில் இருந்து பார்க்க முடியாது. இத்தனை ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தினுள் என்னென்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.



  1. குவின் ஷி ஹுவாங் கல்லறை, சீனா


குவின் ஷி ஹுவாங் சீனாவின் முதல் பேரரசர். சிக்கலான குகைகளுடன் கூடிய கல்லறை இது. இப்போது சீன அரசு இக்கல்லறைக்குள் நுழைய வெளியாட்களுக்குத் தடை விதித்திருக்கிறது.




  1. சென்டிநெல் தீவு, இந்தியா


50,000 ஆண்டுகளுக்கும் மேலாக புற உலகத்தினுடனான எந்தவித தொடர்பும் இன்றி தனிமையில் வசிக்கும் சென்டிநெல் மக்கள் நிரம்பிய தீவு இது. பாதுகாப்பின் காரணமாக இந்திய அரசு இந்த தீவுக்குள் பிறர் நுழைய தடை விதித்திருக்கிறது.



  1. லாஸ்காக்ஸ் குகைகள், ஃபிரான்ஸ்


17,300 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் இந்த குகைகளில் தீட்டப்பட்டுள்ளன, மனிதர்களின் அருகாமையினால் இந்த ஓவியங்கள் சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக ஃபிரான்ஸ் அரசு இந்த குகையை பாதுகாத்து வருகிறது.



  1. டூம்ஸ்டே வால்ட், நார்வே


உலகம் அழியும்போது இந்த பூமியின் விதைகளைக் காப்பதற்கான விதை வங்கி இது. கடலில் இருந்து உயரத்தில் ஒரு மலையின் மீது அமைந்திருக்கும் இந்த வங்கி 200 ஆண்டுகள் பழமையானது. வெளியாட்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை.


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.