இங்கிலாந்தில் 20 வயது கல்லூரி மாணவி கழிவறையில் குழந்தைப் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவில் ஜெஸ் டேவிஸ் என்ற 20 வயது மாணவி ஒருவர் பயின்று வந்தார். இவருக்கு கடந்த ஜூன் 11 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை டேவிஸ் மாதவிடாயின் ஆரம்பம் என கருதி கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார்.
ஆனால் வலியின் தீவிரதத்தால் அவரால் எழுந்து நடக்கவோ, படுக்கையில் படுக்கவோ கூட முடியாமல் போனது. இதனிடையே மறுநாள் ஜூன் 12 ஆம் தேதி தனக்கு பிறந்தநாள் என்பதால் குளித்துவிட்டு இரவு விருந்துக்கு செல்ல தயாராகியுள்ளார். நிலைமை மோசமாக டேவிஸூக்கு கழிவறைக்கு செல்ல வேண்டும் என தோன்றியுள்ளது.
உடனடியாக கஷ்டப்பட்டு கழிவறைக்கு சென்ற அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேவிஸ் எந்த நேரத்திலும் நான் குழந்தை பெற்றெடுப்பேன் என நினைக்கவில்லை என்றும், குழந்தை வெளியே வந்ததும் அது என்னவென்று அறிவதற்கும், குழந்தை அழுவதற்கும் நேரம் சரியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது நிஜமான சம்பவம் என்று உணரவே நிறைய நேரம் ஆனது எனவும் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு வெளிப்படையான கர்ப்ப அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், மாதவிடாய் சுழற்சி எப்பொழுதும் ஒழுங்கற்றதாக இருந்தாகவும் அவர் கூறியுள்ளார். உடனடியாக சக நண்பரான லிவ் கிங்கை போனில் வரவழைத்தார். ஆனால் பிறந்தநாள் விருந்துக்கு வராமல் இருப்பதற்கு டேவிஸ் இப்படி கூறுவதாக நினைத்த லிவ் கிங், பிறந்த குழந்தையின் புகைப்படத்தை பார்த்தவுடன் தான் நிலைமையை உணர்ந்துள்ளார்.
உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்குமாறு டேவிஸிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். 3 கிலோ எடைக் கொண்ட அந்த ஆண் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. 35 வாரங்களில் டேவிஸ் குழந்தை பெற்றதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சமீப காலமாக உலகளவில் இளம் வயதில் குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்