புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பாவின் மேயர், குடும்பத்துடன் மீன் பிடிக்க போட்டில் பயணம் செய்துகொண்டிருந்த போது தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த 70 பவுண்டு கொக்கைன் நிரம்பிய ஒரு பை அவர்களிடம் சிக்கியுள்ளது.


மீன் பிடிக்க சென்றபோது கிடைத்த கொக்கைன்


ஜூலை 23 அன்று, மேயர் ஜேன் காஸ்டர் தனது குடும்பத்தினருடன் மீன் பிடி பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் மிதந்து வந்த பிளாஸ்டிக்கில் கவர் செய்யப்பட ஒரு பை அவர்களிடம் சிக்கியுள்ளது. அதனை தம்பாவின் அனுபவமிக்க காவல்துறை அதிகாரி மற்றும் நகரின் முதல் பெண் காவல்துறைத் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்து, உடனடியாக பல அடுக்கு பிளாஸ்டிக்கில் மூடப்பட்ட பொதியை திறந்து பார்த்ததாக செவ்வாய்க்கிழமை நகர செய்தித் தொடர்பாளர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார்.



ரூ. 9 கோடி மதிப்புள்ள பொருட்கள்


திறந்து பார்த்தபோது அதில் இருப்பது கொக்கைன் என்று தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் $1.1 மில்லியன் டாலர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது சுமார் 9 கோடி ரூபாய்க்கு மேல் என்று கணக்கிடப்படுகிறது. மியாமி செக்டருக்குப் பொறுப்பான தலைமை எல்லைக் காவல் ஏஜென்ட் வால்டர் ஸ்லோசர், மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை அவரது ஏஜென்ட்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த பொருட்கள் செங்கற்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: TNPSC Group 1: தயாரா..! டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு..95 பதவிகளுக்கு 2, 113 பேர் போட்டி.. இன்று தொடங்கி 3 நாட்கள் தேர்வு


சமூக வலைதள பதிவு


"வார இறுதியில், மியாமி செக்டரில் உள்ள பார்டர் ரோந்து முகவர்கள் 70 பவுண்டுகள் கோகோயினைக் கைப்பற்றினர், இது புளோரிடா கீஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு படகோட்டியால் கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு தோராயமாக $1.1 மில்லியன்" என்று ஏஜென்ட் வால்டர் ஸ்லோசர் டிவிட்டர் எனப்படும் X சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவில் எழுதினார். 






தண்ணீர் சென்று இறுக்கமான பேக்கேஜ்


மேயர் காஸ்டர் கோகோயினை எடுத்ததும், அதனை அவரது குடும்பத்தினர், தங்கள் படகில் ஏற்றினர். காஸ்டர் தம்பா பே டைம்ஸிடம் கூறியது போல், பேக்கேஜிங் லேசாக கிழிந்ததால், உள்ளே தண்ணீர் சென்று மேலும் இறுக்கமாக மாறியது தெரியவந்தது. மிடில் கீஸ் நகரமான மராத்தானில் இருந்து அவர்கள் கண்டுபிடித்த இடத்திற்கான சரியான லொகேஷனை மேயர் காஸ்டர் தனது ஸ்மார்ட் வாட்சில் சேவ் செய்து வைத்தார். பின்னர் அவர்கள் தாங்கள் தங்கி இருந்த விடுமுறை ஹோட்டலுக்கு திரும்பியதாக தம்பா பே டைம்ஸுக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.