சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகளை மனிதர்கள் காப்பாற்றும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர் ஒருவர் செய்துள்ள காரீயம் பெரும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. 


உக்ரைன் நாட்டின் டொன்ஸ்டேக் பகுதியில் அமைந்துள்ள ஏரி ஒன்று கடும் குளிர் காரணமாக பனியில் உறைந்துள்ளது. அங்கு சுமார் -7 டிகிரி வரை குளிர் வாட்டி வதக்கி வருகிறது. அந்த உறைந்த ஏரியில் நாய் ஒன்று சிக்கியுள்ளது. அந்த நாயை இளைஞர் ஒருவர் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இதற்காக அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர் உறைந்த ஏரியில் இறங்கியுள்ளார். 


 






அதன்பின்னர் அதில் ஐஸ்கட்டியை உடைத்து நீரில் நீந்தி சென்று சிக்கி கொண்டிருந்த நாயை மீட்டு வந்துள்ளார். அவரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் அந்த இளைஞர் நாயை காப்பாற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து அந்த நபருக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கடும் பனியில் தன்னுடைய உயிர் பற்றி நினைக்காமல் அந்த நாயை காப்பாற்றியதை அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அன்பு சூழ்ந்த இந்த உலகத்தில் அவருடைய செயல் அன்பை பரப்பும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண



மேலும் படிக்க: 99 வயது மூதாட்டிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை: ரகசிய கேமராவால் சிக்கிய பராமரிப்பாளர்..!