மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த கணவனை போலீசார் கைது செய்தனர். ஈரான் நாட்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.


தனது மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கண்டுபிடித்த பிறகு, அவரது தலையை தெருவில் எடுத்து சுற்றிய நபரின் வைரல் வீடியோ ஈரானியர்களை ஆழமாக உலுக்கியது.


ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் மோனா ஹெய்டாரி என்ற 17 வயது இளம்பெண் அவரது கணவர் மற்றும் மைத்துனரால் கொல்லப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர் என்று ஈரானின் ISNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓர் இடத்தில் மறைந்திருந்த அவர்களை இரண்டு தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்துள்ளனர்.




மேலும் படிக்க: 99 வயது மூதாட்டிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை: ரகசிய கேமராவால் சிக்கிய பராமரிப்பாளர்..!




கொலையான பெண்ணுக்கு திருமணமானபோது வெறும் 12 வயதுதான், அவர் கொல்லப்படும்போது மூன்று வயது மகன் இருந்தான் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகிறது.


ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவரான என்சீஹ் கசாலி,  இந்த வழக்கு மீது அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார். இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


ஈரானிய செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த கொலைக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.  




மேலும் படிக்க: 6 மாதங்களில் 2,439 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை; இதில் 90 பெண்கள் கௌரவக்கொலை - அதிர்ச்சி தகவல்




"இதுபோன்ற சோகத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? மீண்டும் ஒரு பெண்ணடிமை படுகொலை நடக்காத வகையில் நாம் செயல்பட வேண்டும். மோனா தனது அறியாமையால் பாதிக்கப்பட்டவர். இந்த குற்றத்திற்கு நாம் அனைவரும் பொறுப்பு” என்று புகழ்பெற்ற பெண்ணிய திரைப்பட தயாரிப்பாளர் தஹ்மினே மிலானி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.


ஹெய்டாரியின் கொலையைத் தொடர்ந்து, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களைச் சீர்திருத்தவும், தற்போது ஈரானில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 13 ஆக உயர்த்தவும் கோரிக்கைகள் மீண்டும் எழுப்பப்பட்டன.


கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதத்தில், ஈரானில் தனது 14 வயது மகளின் தலையை துண்டித்து கௌரவக் கொலை செய்த தந்தைக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: 'ஆபாசப்படம் பாக்கணும்னா.. ஆவணத்தைக் காட்டுங்க' - அதிரடி காட்டும் அரசு.! வரும் புதிய ரூல்!!




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண