Just In





Zelensky: ரஷ்யாவுக்கு செக் வைக்கனும்.! உலக நாடுகளிடம் ஆயுதத்தை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.!
Zelensky Seeks Defense Help: உலக நாடுகள், உக்ரைனுக்கு ஆதரவு தர வேண்டும், அதன் மூலம் ரஷ்யாவை கட்டுபடுத்த முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும், அதற்கு ரஷ்யாவை தடுக்க வேண்டும், இதற்கு ராணுவ ரீதியிலான ஆதரவை உலக நாடுகள் வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர்:
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில், இரு நாடுகளின் எல்லைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், இரு நாட்டு மக்களும் பெரும் பாதிப்புகளையும், இழப்புகளையும் சந்தித்துள்ளன.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்துவதற்கு, தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் அதிபராக பதவியேற்றதையடுத்து, ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாட்டு தலைவர்களுடன் உரையாடினார்.
பல தசாப்தங்களாக ரஷ்யாவுடன் எதிரான போக்கு மனப்பான்மை கொண்ட அமெரிக்கா, டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யா அதிபர் புதினுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைடுத்து, உறவானது நெருக்கமானது. உக்ரைனுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா எதிராக மாறியது. இது உலக அரசியலையே வியப்பில் ஆழ்த்தியது. ஒரு தொலைபேசி உரையாடல் , உலக அரசியலையே மாற்றிவிட்டது.
டிரம்புடன் ஜெலன்ஸ்கி மோதல்:
நேற்றைய முன்தினம் , உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்குச் சென்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இடையிலான வார்த்தை மோதலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஜெலன்ஸ்கியை டிரம்ப் கடுமையாக விமர்சித்து பேசியதாகவும் பார்க்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள்
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் , பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் உக்ரைன் ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இது, சற்று ஆறுதலை தருவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
உலக நாடுகள் உதவ வேண்டுகோள்:
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தற்போது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, “ உக்ரைன் அமைதிக்காகவும் பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும் போராடுகிறது. இந்த போரானது முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ரஷ்யா தனது வான்வழி தாக்குதலை தொடர்கிறது.
கடந்த வாரத்தில், 1,050 க்கும் மேற்பட்ட தாக்குதல் யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டத்தட்ட 1,300 வான்வழி குண்டுகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மக்கள் வாழும் பகுதிகளில் ஏவப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்கு வருபவர்கள், யாராவது வேண்டுமென்றே ஏவுகணைகளால் பொதுமக்களை தாக்குவார்களா, ரஷ்யாவை அதன் தாக்குதல்களை நிறுத்தும்படி கட்டாயப்படுத்த, உலக நாடுகளில் இருந்து, எங்களுக்கு ஆதரவு தேவை.
நமது வான் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தடுக்கும். ஒற்றுமையின் சக்தியை நாங்கள் நம்புகிறோம், நிரந்தர அமைதியை நிச்சயமாக மீட்டெடுப்போம் நீதி வெல்ல வேண்டும். அதற்கு உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் போது, ரஷ்யாவை தடுக்க முடியும் , அமைதியை ஏற்படுத்த முடியும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.